நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வரணும்.. பிசிசிஐ முதல்ல இதை நிறுத்துனாதான் நல்ல பிளேயர்ஸ் வருவாங்க – கவாஸ்கர் விமர்சனம்

0
592

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் இந்திய அணி மிக மோசமாக விளையாடி 1-3 என்ற கணக்கில் டெஸ்ட் தொடரை இழந்துள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் இந்திய அணியில் நட்சத்திர கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் என்று சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் மோசமான தோல்வி

இந்திய டெஸ்ட் அணியில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோரின் பேட்டிங் ஃபார்ம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாகவே கேள்விக்குறியில் இருந்து வருகிறது. இருப்பினும் அவர்கள் இருவரும் டெஸ்ட் அணியில் தொடர்ந்து நீடித்து வந்தனர். இந்த நிலையில் சொந்த மண்ணில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இருவரும் மோசமான பேட்டிங் பார்மை வெளிப்படுத்திய நிலையில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முக்கியமான பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரிலும் இவர்களின் மோசமான செயல்பாடு இந்திய அணி தொடரையே இழக்கும் அளவுக்கு கொண்டு சென்றுள்ளது.

அது மட்டுமல்லாமல் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு தகுதி பெறும் வாய்ப்பையும் இழந்துள்ளது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் நட்சத்திர வீரர்களுக்கு ரசிகர்களாக இருப்பதை விடுவித்து முதலில் அணிக்காக விளையாடும் திறமையான வீரர்கள் இந்திய அணிக்குள் கொண்டுவரப்பட வேண்டும் எனவும் நட்சத்திர கலாச்சாரம் முற்றிலும் ஒழிக்கப்பட வேண்டும் எனவும் சில முக்கியமான கருத்துக்களை கூறியிருக்கிறார்.

- Advertisement -

நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும்

இதுகுறித்து கவாஸ்கர் விரிவாக கூறும்போது “இந்திய கிரிக்கெட் ஒரு நல்ல நேர்மையான நிலையை அடைவதற்கு அடுத்த 8 முதல் 10 நாட்கள் மிகவும் முக்கியம் என்று நினைக்கிறேன். இதில் முதலில் நட்சத்திர கலாச்சாரம் முடிவுக்கு வர வேண்டும். இந்திய கிரிக்கெட்டுக்கான முழு அர்ப்பணிப்பு என்பது பேச்சுவார்த்தைக்கு உட்பட்டது அல்ல. உண்மையான மருத்துவ அவசர நிலையைத் தவிர மற்ற நேரங்களில் இந்திய வீரர்கள் கிடைக்கும்படி தங்களைவைத்திருப்பது அவசியம். யாரும் முழுமையான அர்ப்பணிப்போடு செயல்படவில்லை என்றால் அவரை தேர்வு செய்யக்கூடாது.

இதையும் படிங்க:ஐயா நான் என்ன செய்யணும்.. அவர்கிட்ட இதைக்கேட்க கோலிக்கு எவ்ளோ நேரம் ஆகும்.? – இர்பான் பதான் பேட்டி

ஓரளவு இங்கேயும் ஓரளவு வேறு இடங்களிலும் இருக்கும் வீரர்கள் தேவையில்லை. இனி யாரையும் புகழ்ந்து பேச வேண்டிய அவசியம் இல்லை. சமீபத்திய முடிவுகள் ஏமாற்றம் அளிக்கிறது இந்திய அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இருந்திருக்க வேண்டும் ஆனால் இப்போது அதில் இல்லை. கிரிக்கெட் வாரியம் ரசிகர்கள் போல செயல்படுவதை முதலில் நிறுத்திவிட்டு அணிக்காக செயல்பட வேண்டும். இந்திய அணி தான் முதலில் முக்கியம் என வீரர்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்” என சுனில் கவாஸ்கர் கூறியிருக்கிறார்.

- Advertisement -