சாம்சனை தரோம்.. ஆனா அந்த 3 பேர்ல ஒருத்தர் வேணும்.. அடிமடியில் கை வைத்த ராஜஸ்தான்.. நிராகரித்த சிஎஸ்கே.. முழு விபரம்

0
466

அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் ஐபிஎல் தொடர் நடைபெற உள்ள நிலையில் அதன் பரபரப்பு இப்போதே சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளது.

இந்த சூழ்நிலையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு கொடுத்து சிஎஸ்கேவில் முக்கிய வீரர்கள் மூன்று பேரில் ஒருவரை கேட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்த ஆண்டு நடைபெற்று முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் காயம் காரணமாக அதிக ஆட்டங்களில் விளையாடவில்லை. அவருக்கு பதிலாக மற்றொரு இளம் வீரர் ரியான் பராக் கேப்டன் பொறுப்பை ஏற்று அணியை வழிநடத்தினார். இந்த சூழ்நிலையில் அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடருக்கு முன்னதாக சாம்சன் ராஜஸ்தான் அணியில் இருந்து வெளியேற விரும்புவதாக தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த சூழ்நிலையில் சாம்சனை தங்கள் அணிக்கு வாங்க முயற்சிக்க சிஎஸ்கே நிர்வாகம் விரும்புவதாகவும் அண்மையில் செய்திகள் வெளியானது. எம் எஸ் தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆக சாம்சன் இருப்பார் என சிஎஸ்கே தரப்பில் நம்புவதாக கூறப்படுகிறது. எனவே இந்த சூழ்நிலையில் டிரேடிங் முறையில் சாம்சனை ராஜஸ்தான் அணி சென்னை அணிக்கு மாற்ற விரும்புவதாகவும், சென்னை அணியில் இருக்கும் முக்கிய மூன்று வீரர்களில் ஒருவரை தங்கள் அடுக்கு இழுக்க முயற்சிகள் நடந்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகின.

- Advertisement -

இதுகுறித்து சமீபத்தில் க்ரிக் பஸ்ஸில் வெளிவந்த தகவலின் படி, சஞ்சு சாம்சனை சென்னை அணிக்கு டிரேடிங் முறையில் மாற்றி, சிஎஸ்கேவில் இருக்கும் ரவீந்திர ஜடேஜா, சிவம் துபே அல்லது கேப்டன் ருத்ராட்ஜ் கெய்க்வாட் ஆகிய மூன்று வீரர்களில் ஒருவர் வேண்டும் என ராஜஸ்தான் நிர்வாகம் கேட்டதாக கூறப்படுகிறது. ஆனால் அதனை உடனடியாக சிஎஸ்கே நிர்வாகம் மறுத்ததாகவும் கூறப்படுகிறது. ஏற்கனவே அஸ்வின் சென்னை அணியில் இருந்து தன்னை விடுவிக்க கூறிய நிலையில் அவரை ராஜஸ்தான் அணியை தங்கள் அணிக்கு மீண்டும் எடுக்கும் முயற்சிப்பதாகவும் செய்திகள் கூறுகிறது.

இதையும் படிங்க:ஐசிசி எங்களுக்கு துரோகம் பண்ண கூடாது.. இந்தியாவுக்கு தரத எங்களுக்கு தரணும் – வெ.இ கிளைவ் லாயிட் கோரிக்கை

இருப்பினும் சென்னை அணி தங்களது வீரர்களை வெளியே விடக்கூடாது என்பதில் உறுதியாக உள்ளது. வேண்டுமானால் கடந்த சீசனில் புதிதாக எடுக்கப்பட்ட ராகுல் திருப்பாதி, விஜய் சங்கர் மற்றும் தீபக்ஹூடா போன்ற வீரர்களை வெளியே விட அதிக வாய்ப்புள்ளது. எனவே சாம்சன் சென்னை அணிக்கு ட்ரேடிங் முறையில் மாற்றம் செய்யப்படுவாரா அல்லது புதிய அணி அவரை வாங்குமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

- Advertisement -