இந்திய கிரிக்கெட்

முக்கிய பவுலர் காயம்.. இந்திய அணிக்கு பின்னடைவு.. பெரிய சிக்கலில் ரோகித் சர்மா.. ஆஸி கடைசி டெஸ்ட்

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்தாவது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டியில் நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இதற்காக இரண்டு அணி வீரர்களும் தீவிரமாக தயாராகி வருகிறார்கள்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முக்கிய பவுலர் காயமடைந்திருப்பது பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்தியா ஆஸ்திரேலியா கடைசி டெஸ்ட்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் டிராபி தொடரில் விளையாடி வரும் இந்திய அணி இதுவரை விளையாடிய நான்கு போட்டிகளில் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்று இருக்கிறது.இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலியா அணி வெற்றி பெற்றுள்ளது. எனவே கடைசி டெஸ்ட் போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ள நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே இந்திய அணி டெஸ்ட் தொடரை இழக்காமல் இருக்க முடியும்.

இந்த இக்கட்டான சூழ்நிலையில் இந்திய அணிக்கு பந்துவீச்சு பிரச்சனை பெரிய தலைவலியாக உள்ளது. இந்திய டெஸ்ட் அணியின் மிக முக்கிய பௌலரான முகமது ஷமி காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஆகாஷ் தீப் மற்றும் ஹர்ஷித்ராணா மற்றும் பிரசித் கிருஷ்ணா போன்ற இளம் வீரர்கள் விளையாடுவதற்கு வாய்ப்பு பெற்றனர். அதில் ஹர்ஷித் ராணா முதல் இரண்டு போட்டிகளில் விளையாடினாலும் அது இந்திய அணிக்கு போதுமானதாக அமையவில்லை.

- Advertisement -

முக்கிய பந்துவீச்சாளர் காயம்

இந்த நிலையில் மூன்றாவது போட்டியில் இருந்து விளையாட வாய்ப்பு பெற்ற ஆகாஷ் தீப் கடந்த இரண்டு போட்டிகளிலும் ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகிறார். மூன்றாவது டெஸ்ட் போட்டியில் மூன்று விக்கெட்டுகளும் நான்காவது போட்டியில் இரண்டு விக்கெட்களும் வீழ்த்தி இருக்கும் நிலையில் கடந்த இரண்டு போட்டிகளிலும் அதிகப்படியான ஓவர்கள் வீசி இருப்பதால் அவரின் முதுகுப்பகுதியில் காயம் அடைந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடைசி இரண்டு டெஸ்ட் போட்டியிலும் 75 ஓவர்கள் வரை வீசி இருக்கிறார்.

இதையும் படிங்க:நல்லவேல..பும்ராகிட்ட இருந்து தப்பிச்சேன்.. இல்லனா நிலைமை மோசமாகி இருக்கும் – பேட் கம்மின்ஸ் பேட்டி

எனவே அவருக்கு பதிலாக முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய ஹர்ஷித் ரானா ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் வாய்ப்பு பெறுவார் என்று எதிர்பார்க்கலாம். மேலும் இந்த போட்டியிலும் பும்ராவின் மீது அதிகப்படியான பந்துவீச்சு அழுத்தம் இருப்பது தெளிவாக தெரிகிறது. மேலும் முகமது சிராஜ், ஜடேஜா மற்றும் வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் நன்றாக செயல்பட்டால் ஐந்தாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெறுவதற்கு அதிகமான வாய்ப்புகளும் இருக்கிறது.

- Advertisement -
Published by