இன்னொரு மோசமான தோல்வி வரவே கூடாது.. இங்கி டெஸ்டுக்கு கம்பீர் போடும் பக்கா ஸ்கெட்ச் – இந்திய முன்னாள் வீரர் வியப்பு

0
270

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் சாம்பியன்ஸ் டிராபி தொடரை வெற்றி பெற்றதை அடுத்து தற்போது வெற்றி கொண்டாட்டத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடருக்குப் பிறகு இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த சூழ்நிலையில் கம்பீர் போடும் திட்டம் குறித்து இந்திய முன்னாள் வீரர் நவ்ஜோத் சிங் சித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

கம்பீர் போடும் திட்டம்

இந்திய கிரிக்கெட் அணி சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் மோசமான தோல்விகளை சந்தித்து 10 வருடங்களுக்குப் பிறகு தொடரை இழந்தது. அப்போது இந்திய அணியின் சீனியர் வீரர்கள் உட்பட கோச் கம்பீர் குறித்தும், பல எதிர்மறையான விமர்சனங்கள் வெளிவந்தன. இந்த நிலையில் இங்கிலாந்து ஒரு நாள் தொடர் மற்றும் சாம்பியன்ஸ் டிராபி தொடர் என்று இரண்டிலும் வெற்றி பெற்றதால், அந்த விமர்சனங்கள் தற்போது அடங்கியுள்ளது.

இந்த சூழ்நிலையில் ஐபிஎல் தொடருக்கு பிறகு இந்திய அணி மீண்டும் இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இங்கிலாந்து சூழ்நிலையும் கிட்டத்தட்ட ஆஸ்திரேலியாவின் சூழ்நிலையை போலவே இருப்பதால் இந்த டெஸ்ட் தொடரை எப்படியும் வெற்றி பெற்று விட வேண்டும் என்று கௌதம் கம்பீர் தலைமையிலான பயிற்சி குழு இந்திய ஏ அணியுடன் ஒரு மாதத்திற்கு முன்னதாகவே இங்கிலாந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

- Advertisement -

இந்திய முன்னாள் வீரர் பாராட்டு

இந்திய ஏ அணியுடன் அங்கு சென்று, ஆடுகளத்தின் சூழல் மற்றும் காற்றில் பந்து ஸ்விங் ஆகும் தன்மை உள்ளிட்ட பல விஷயங்களை முன்னரே அறிந்து அதற்கு தகுந்தவாறு இந்திய அணியை தயார் செய்யும் நோக்கில் கம்பீர் இந்த முடிவை எடுத்திருப்பதாக கூறப்படுகிறது. இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரர் நவ்ஜோக்சிங் சித்து கம்பீரின் முடிவை பாராட்டி பேசி இருக்கிறார்.

இதையும் படிங்க:2017ல என் வேலை முழுசா முடியல.. கோப்பையை கைவிட்டோம்.. ஆனா இப்போ நாங்க சாம்பியன் – ஹர்திக் பாண்டியா

இதுகுறித்து அவர் கூறும் போது “இங்கிலாந்து டெஸ்ட் தொடரின் முதல் பாதியில் விளையாடுவது கௌதம் கம்பீர்க்கு பெரிய சவாலாக இருக்கும். காற்றில் ஈரப்பதமான ஆடுகளங்கள், காற்றின் எதிர்ப்பு காரணமாக ஆடுகளத்தின் பக்கவாட்டில் பந்து ஸ்விங் ஆகும் தன்மை” உள்ளிட்ட விஷயங்கள் சவாலானதாக இருக்கும். இந்திய ஏ அணியுடன் அங்கு செல்ல விரும்புவது போட்டிக்கு முன்னதாகவே தயாராகும் ஒரு திட்டமிடலை வழங்குகிறது. இது போன்ற முன்னேற்பாடுகளில் தகுந்த வெற்றிகளை வழங்குகின்றன” என்று சித்து பாராட்டி இருக்கிறார்.

- Advertisement -