2017ல என் வேலை முழுசா முடியல.. கோப்பையை கைவிட்டோம்.. ஆனா இப்போ நாங்க சாம்பியன் – ஹர்திக் பாண்டியா

0
63

சமீபத்தில் நடைபெற்று முடிந்த சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடரில் இந்திய அணி நியூசிலாந்து அணியை வீழ்த்தி சாம்பியன் கோப்பையை கைப்பற்றி அசத்தியது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் ஆல் ரவுண்டர் ஹர்திக் பாண்டியா இது குறித்து சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்திய அணியின் முக்கியத் தூண்

இந்த தொடரை பொறுத்தவரை இந்திய அணி ஒரு போட்டியில் கூட தோல்வியடையாமல் விளையாடிய ஐந்து போட்டிகளிலும் தொடர்ச்சியாக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியுள்ளது. இந்திய அணியில் குறிப்பாக பேட்டிங், பந்து வீச்சு மற்றும் பீல்டிங் என அனைத்தும் சிறப்பாக இருந்த நிலையில் போட்டியை ஒரு நபராக வென்று தரக் கூடிய பல வீரர்கள் அந்த அணியில் இருந்தார்கள். இதில் குறிப்பாக அணியின் ஆல் ரவுண்டர் ஹார்திக் பாண்டியா இக்கட்டான நேரங்களில் இந்திய அணிக்கு முக்கியத் தூணாக விளங்கி இருக்கிறார்.

தேவைப்படும் நேரங்களில் பந்துவீச்சு மற்றும் பேட்டிங் என இரண்டிலும் சிறப்பாக செயல்பட்டு போட்டியை இந்திய அணியின் பக்கம் சாய்த்து இருக்கிறார். இந்த சூழ்நிலையில் 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் அணிக்கு எதிரான இறுதிப் போட்டியில் தனது வேலையை முழுவதும் முடிக்காமல் சென்றதாகவும், ஆனால் இந்த முறை கோப்பையை வெற்றி பெற்றதில் மகிழ்ச்சி அடைவதாகவும் பாண்டியா சில உணர்ச்சிகரமான கருத்துக்களை வெளிப்படுத்தி இருக்கிறார்.

- Advertisement -

அப்போ என் வேலை முடியல

இதுகுறித்து ஹர்திக் பாண்டியா கூறும் போது “2017 ஆம் ஆண்டு வேலை மீதம் இருந்தது. அப்போது என்னால் வேலையை முழுவதுமாக முடிக்க முடியவில்லை என்பது உங்களுக்கு தெரியும். ஆனால் இன்றைய இரவு என்ன நடந்தது என்ன நிகழ்ந்தது என்று சொல்லக்கூடிய அளவிற்கு நான் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் ஒரு சாம்பியன்ஸ் டிராபியை வென்றவன். எனவே இந்த உணர்வு எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது.

இதையும் படிங்க:இந்திய அணியும் தான் தோக்குது.. ஆனா எங்கள மாதிரி இந்த மட்டமான தப்ப அவங்க செய்யறது இல்ல – கம்ரான் அக்மல் விரக்தி

ஒவ்வொரு முறையும் நான் மைதானத்தில் அடி எடுத்து வைக்கும் போது அந்த உணர்வு எனக்கு மிகவும் திருப்திகரமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கிறது. எது எப்படியோ அணி வெற்றிபெறுகிறது என்று நான் உறுதிப்படுத்தா விட்டாலும் அந்த நிகழ்வு எனக்கு மிகவும் அழகாக இருக்கிறது. இந்திய அணியில் அனைவரும் வெளியே வந்து போட்டியை சிறப்பாக விளையாடினார்கள். நமது அணியில் இருக்கும் ஒவ்வொருவரும் திறமையான வீரர்கள் என்று உங்களுக்கு தெரியும்” என்று ஹார்த்திக் பாண்டியா பேசியிருக்கிறார்.

- Advertisement -