இந்திய டீமில் புறக்கணிப்பு.. ஆனா ருதுராஜுக்கு கிடைத்த மிகப்பெரிய பொறுப்பு.. சிஎஸ்கே ரசிகர்கள் மகிழ்ச்சி

0
1793
Ruturaj

இந்திய அணி இலங்கை அணிக்கு எதிராக இரண்டு வெள்ளைப் பந்து தொடர்களில் விளையாடுகிறது. இந்த இரண்டு அணிகளிலும் இந்திய இளம் தொடக்க ஆட்டக்காரர் ருதுராஜுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டிருக்கிறது. அதே சமயத்தில் அவருக்கு வேறொரு வகையில் பெரிய வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

2022 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் முடிந்த பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான உள்நாட்டில் நடைபெற்ற டி20 தொடரில் ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்கினார். அங்கிருந்து தொடர்ச்சியாக அவரை இந்திய டி20 அணியின் மாற்று துவக்க ஆட்டக்காரராக பரிசோதித்து வந்தார்கள்.

- Advertisement -

மேலும் கடந்த ஆண்டில் சீனாவில் நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கேப்டனாக அவர் தலைமையில் சென்ற அணி தங்கப் பதக்கத்தை கைப்பற்றியது. கேப்டன் பொறுப்பில் வீரர்களை அரவணைத்து செல்வது, களத்தில் அவர்களிடம் இருந்து சிறந்ததை பெறுவது என சரியான முறையில் ருதுராஜ் செயல்பட்டு இருந்தார்.

மேலும் 2023 ஆம் ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை தொடர் முடிவடைந்ததும், இந்தியாவில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடைபெற்ற ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ருதுராஜ் தொடக்க வீரராக களம் இறங்கி விளையாடினார். மேலும் சிறப்பாக விளையாடி தன்னுடைய முதல் சர்வதேச சதத்தையும் பதிவு செய்தார். எனவே ரோஹித் சர்மாவுக்கு பிறகு இந்திய டி20 அணியின் துவக்க ஆட்டக்காரராக ருதுராஜ் வருவார் என பல முன்னாள் வீரர்களும் எதிர்பார்த்தார்கள்.

- Advertisement -

இப்படியான நிலையில் சுப்மன் கிள்ளை துவக்க வீரராக கொண்டு வந்ததோடு அவருக்கு துணை கேப்டன் பொறுப்பும் இரண்டு அணிகளிலும் கொடுக்கப்பட்டிருக்கிறது. இன்னொரு பக்கத்தில் மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் துவக்க ஆட்டக்காரராக ஜெய்ஸ்வால் உறுதியாக தெரிகிறார். இதனால் ருதுராஜுக்கு இந்திய அணியில் வாய்ப்பே இல்லாதது போல் காணப்படுகிறது.

இப்படியான சூழ்நிலையில் அவர் விளையாடும் மகாராஷ்டிரா மாநில அணிக்கு இந்த ஆண்டு ரஞ்சி சீசனுக்கு கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தப் பொறுப்பை வகித்து வந்த கேதார் ஜாதவ் ஓய்வு பெற்றதை அடுத்து ருதுராஜுக்கு கேப்டன் பொறுப்பு தேடி வந்திருக்கிறது. இந்திய அணியில் தகுதி இருந்தும் வாய்ப்பு கிடைக்காத நிலையில், தற்போது ஆறுதல் அளிக்கும் விதமாக மாநில அணியின் கேப்டன் பொறுப்பு கொடுக்கப்பட்டிருக்கிறது.

இதையும் படிங்க : பாகிஸ்தானியர்கள் நாங்கள் இப்படித்தான்.. இந்திய அணி அந்தவொரு வாய்ப்பை தவற விடாதிங்க – சோயப் மாலிக் கோரிக்கை

மேலும் ருதுராஜ் உள்நாட்டு முதல் தர கிரிக்கெட்டில் 29 போட்டிகளில் விளையாடி 43.42 ஆவரேஜில் 2041 ரன்கள் எடுத்திருக்கிறார். இதில் 10 அரை சதங்களும் மேலும் ஆறு சதங்களும் அடங்கும். அதிகபட்சமாக 195 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -