உலக கிரிக்கெட்

2024ம் ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணி.. விராட் ரோஹித் இல்லை .. இந்திய வீரர் கேப்டன்.. ஹர்ஷா போக்லேவின் லெவன் அணி

டெஸ்ட் கிரிக்கெட் பொருத்தவரை இந்த ஆண்டு அனைத்து அணிகளும் மிகச் சிறப்பான முறையில் விளையாடி வருகிறது. அதில் குறிப்பாக இங்கிலாந்து வீரர்கள் இந்த ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் சிறப்பான சாதனைகளை படைத்து வருகின்றனர்.

- Advertisement -

இந்த சூழ்நிலையில் புகழ்பெற்ற வர்ணனையாளரான ஹர்ஷா போக்லே இந்த ஆண்டின் சிறந்த டெஸ்ட் அணியை தேர்வு செய்து இருக்கிறார். அதில் விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா, பண்ட் போன்ற வீரர்களுக்கு இடம் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஹர்ஷாபோக்லே தேர்வு செய்துள்ள பிளேயிங் லெவன்

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வரும் நிலையில் இந்திய அணியின் முன்னணி வீரர்களாக கருதப்படும் ரோஹித் சர்மா, விராட் கோலி, ரிஷப் பண்ட் ஆகியோர் தங்களது பேட்டிங்கில் தடுமாறி வருகின்றனர். இந்த நிலையில் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே 2024 ஆம் ஆண்டு சிறந்த டெஸ்ட் அணியை தற்போது தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.

அதில் தொடக்க ஆட்டக்காரர்களாக இந்தியாவைச் சேர்ந்த ஜெய்ஸ்வால் மற்றும் இங்கிலாந்து அணியின் பென் டக்கட்டை தேர்வு செய்துள்ளார்.மேலும் மூன்றாவது வரிசையில் நியூசிலாந்து அணியில் தற்போது சிறப்பாக விளையாடி வரும் கேன் வில்லியம்சனை தேர்வு செய்திருக்கிறார். நான்காவது மற்றும் ஐந்தாவது இடத்திற்கு இந்த டெஸ்ட் தொடரில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் இங்கிலாந்து அணியின் ஜோ ரூட் மற்றும் ஹாரி ப்ரூக் ஆகியோரை தேர்வு செய்துள்ளார்.

- Advertisement -

விராட் ரோஹித் அணியில் இல்லை

இலங்கை அணியின் சிறந்த வீரரான கமிந்து மெண்டிசை தனது ஆறாவது இடத்திற்கு தேர்வு செய்திருக்கிறார். வெண்டிஸ் இந்த ஆண்டு ஐந்து சதங்கள் அடித்து சிறப்பாக விளையாடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல விக்கெட் கீப்பராக பாகிஸ்தான் அணியின் அதிரடி ஆட்டக்காரர் முகமது ரிஸ்வானை தேர்வு செய்துள்ள நிலையில் ஆல் ரவுண்டர் வரிசையில் ரவீந்திர ஜடேஜா இடம் பிடித்திருக்கிறார். இதில் வேகப்பந்து வீச்சை பொருத்தவரை இங்கிலாந்து அணியின் கஸ் அட்கின்ஷன், தென் ஆப்பிரிக்காவின் ரபாடா தேர்வு செய்துள்ள நிலையில் கடைசி பவுலராக பும்ராவை தேர்வு செய்து அவரை கேப்டனாகவும் நியமித்திருக்கிறார்.

இதையும் படிங்க:கம்பீர் இந்த முடிவை எடுக்க வேணாம்.. என்னால பார்க்க முடியல.. மெல்போர்ன்ல இது வேண்டாம் – சுனில் கவாஸ்கர் பேட்டி

இதில் இந்திய அணியின் புகழ்பெற்ற வீரர்களான விராட் கோலி, ரோஹித் சர்மா மற்றும் ரிஷப் பண்ட் போன்றோர் இந்த ஆண்டு பெரிதாக விளையாடாத நிலையில் அவரை தனது அணியில் இருந்து நீக்கி இருக்கிறார்.

2024ஆம் ஆண்டின் ஹர்ஷா போக்லே தேர்வு செய்துள்ள டெஸ்ட் அணி : யஷஸ்வி ஜெய்ஸ்வால், பென் டக்கெட், கேன் வில்லியம்சன், ஜோ ரூட், ஹாரி புரூக், கமிந்து மெண்டிஸ், முகமது ரிஸ்வான் (WK), ரவீந்திர ஜடேஜா, கஸ் அட்கின்சன், ககிசோ ரபாடா, ஜஸ்பிரிட் பும்ரா (சி).

- Advertisement -
Published by