“மனசுல சூப்பர் ஸ்டார்னு நினைப்பு! சுப்மன் கில்ல பார்த்து கத்துக்கோ” – பிருத்வி ஷாவை வெளுத்து வாங்கிய முன்னாள் இந்திய வீரர்

0
1062
Gill

2018 ஆம் ஆண்டு 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான உலகக்கோப்பையை பிரித்திவி ஷா தலைமையில் இந்திய அணி கைப்பற்றியது.

இந்த அணியில் மூன்றாவது வீரராக களமிறங்கி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இருந்தார் சுப்மன் கில். அப்போதைய காலகட்டத்தில் பிரித்திவி ஷா மீதுதான் பெரிய எதிர்பார்ப்பு எல்லோரிடமும் இருந்தது.

- Advertisement -

இவரை அடுத்த சச்சின் மற்றும் சேவாக்கின் கலவை என்று முன்னாள் வீரர்கள் வெகுவாகப் பாராட்டி எதிர்பார்ப்புடன் இருந்தார்கள்.

எதிர்பார்ப்புக்கு தகுந்தவாறே துலிப் டிராபி, ரஞ்சி டிராபி, சர்வதேச டெஸ்ட் என தான் அறிமுகமாகிய மூன்று முக்கிய தொடர்களிலும் சதம் அடித்து அசத்தியிருந்தார் பிரத்விஷா.

இந்தச் சாதனையை இந்திய அளவில் நிகழ்த்திய ஒரே வீரர் இவர் மட்டுமே. சச்சின் சர்வதேச அறிமுகத்தில் சதம் அடிக்க வில்லை ஆனால் மற்ற இரண்டு டிராபியிலும் சதம் அடித்திருந்தார்.

- Advertisement -

ஆனால் இப்பொழுது 2023 ஆம் ஆண்டில் ஐபிஎல் தொடரோடு சேர்த்து மொத்தம் எட்டுச் சதங்கள் அடித்து சுப்மன் கில் முன்னிலையில் இருக்கிறார். ஆனால் ப்ரீத்திவி ஷா அறிமுகத்திற்கு பிறகு உடல் தகுதி மற்றும் ஒழுங்கீன நடவடிக்கை என்று காணாமல் போய்விட்டார். தற்போதைய ஐபிஎல் தொடரிலும் பெரிதான செயல்பாடு ஏதுமில்லை.

இது குறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் கர்ஷன் காவ்ரி கூறும்போது ” அவர்கள் 2018 அண்டர் 19 உலகக்கோப்பை இந்திய அணியில் ஒன்றாக விளையாடினார்கள். தற்போது இவர்கள் இருவரும் இருக்கும் இடங்கள் எங்கே? இருவரும் வெவ்வேறு இடத்தில் இருக்கிறார்கள்.

பிரிதிவி ஷா தன்னை ஒரு நட்சத்திரம் என்றும் தன்னை யாரும் தொட முடியாது என்றும் நினைக்கிறார். ஆனால் சர்வதேச கிரிக்கெட்டோ ரஞ்சி தொடரோ ஒரு வீரரை வெளியேற்ற ஒரு பந்து மட்டுமே போதும் என்பதை அவர் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்களுக்கு மனக்கட்டுப்பாடு மற்றும் ஒழுக்கம் தேவை. நீங்கள் தொடர்ந்து உங்களுடையதில் வேலை செய்ய வேண்டும். நீங்கள் கிரீசில் அதிக நேரம் நிற்க வேண்டும். இதை நீங்கள் செய்தால் உங்களுக்குத் தாமாக ரன்கள் வரும்!” என்று கூறியிருக்கிறார்!