“சிகப்பு பந்து வெள்ளை பந்து என்று இல்லை என்னுடைய திட்டம் எப்போதுமே இது தான” – ஆட்டநாயகன் முகமது சமி பேட்டி!

0
250

உலக டி20 லீக் தொடர்களின் முன்னோடியான ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் பதினாறாவது சீசன் தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . இந்தப் போட்டியில் கலந்து கொள்ளும் பத்து அணிகளும் மற்ற அணிகளுடன் முதல் சுற்றில் மோதிய நிலையில் தற்போது இரண்டாவது சுற்று போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன .

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் குஜராத் மற்றும் டெல்லி அணிகள் மோதின . இதுவரை இரண்டு வெற்றிகளை மட்டுமே பெற்று இருந்த டெல்லி அணி பத்தாவது இடத்திலும் ஆறு வெற்றிகளுடன் குஜராத் அணி முதலிடத்திலும் இருந்தது .

- Advertisement -

முதலில் பேட்டிங்கை தேர்வு செய்த டெல்லி அணிக்கு பவர் பிளே ஓவர்களிலேயே அதிர்ச்சி அளித்தார் முகமது சமி. மிகச் சிறப்பாக பந்து வீசி அவர் தன்னுடைய மூன்று ஓவர்களில் ஆதாரங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார் . இதனால் முதல் ஆறு ஓவர்களுக்கு உள்ளேயே டெல்லி ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது .

அமான் கான் மற்றும் அக்சர் பட்டேல் ஆகியோரின் சிறப்பான ஆட்டத்தால் 20 ஓவர்கள் முடிவில் எட்டி விக்கெட் இழப்பிற்கு 130 ரன்கள் எடுத்தது . சிறப்பாக ஆடிய அம்மான் 51 ரண்களை எடுத்தார் . 131 ரன்கள் என்ற எளிதான வெற்றி இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 125 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் மூலம் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் டெல்லி யானியிடம் ஐபிஎல் தொடர்களில் முதல் முறையாக தோல்வியை சந்தித்தது . அந்த அணியின் கேப்டன் கார்த்திக் பாண்டியா சிறப்பாக விளையாடி 53 பந்துகளில் 59 ரன்களை எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார் . டெல்லி அணியின் பந்துவீச்சில் கலீல் அகமது இரண்டு விக்கெட்டுகளையும் இஷாந்த் சர்மா இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தினார் .

இந்தப் போட்டியில் சிறப்பாக பந்து வீசி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய முகமது சமி ஆட்டநாயகனாக தேர்வு செய்யப்பட்டார் . ஆட்டநாயகன் விருது பெற்ற அவர் பேட்டியின் போது ” எங்களது திட்டப்படி சரியான லென்த் மற்றும் லைனில் வந்து வீசினேன் . கேப்டன் உடன் ஆலோசித்து செயல்பட்டேன் ஆடுகளத்தில் நிறைய ஸ்விங் இல்லை . 130 ரன்கள் என்பவை எளிதாக எடுக்கக்கூடிய இலக்கு தான் . நாங்கள் ஆரம்பத்திலேயே விக்கெட்டுகளை இழந்ததால் இந்த இலக்கு எங்களுக்கு கடினமானது” என்று தெரிவித்தார்.

- Advertisement -

மேலும் தொடர்ந்து பேசி அவர் ” ஆரம்பத்திலேயே பார்ட்னர்ஷிப் கிடைத்திருக்க வேண்டும். ஆனால் துரதிஷ்டவசமாக எங்களுக்கு இறுதி ஓவர்களில் தான் பார்ட்னர்ஷிப் அமைந்தது . இதுபோன்ற தவறுகள் அவ்வப்போது நடக்கக் கூடியது தான் இன்னும் நிறைய போட்டிகள் வீதம் இருக்கின்றன” என்று தெரிவித்தார்.