பிராட்மேன் முதல் 9000 ரன் வரை.. கோலி முறியடிக்க போகும் 4 மகத்தான சாதனைகள்.. வங்கதேச தொடரில் வாய்ப்பு

0
25

இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடர் வருகிற செப்டம்பர் 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ளது. இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணியை சமீபத்தில்இந்திய கிரிக்கெட் வாரியம் அறிவித்தது.

இந்திய வீரரான விராட் கோலி கடைசியாக தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடினார். அதற்குப் பிறகு இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரில் விளையாடாத நிலையில் தற்போது வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் மீண்டும் களம் இறங்க இருக்கிறார். இவரைத் தொடர்ந்து கடைசியாக டி20 உலக கோப்பையில் விளையாடிய வேகப்பந்துவீச்சாளர் பும்ராவும் இந்திய அணிக்கு திரும்பி இருக்கிறார்.

- Advertisement -

வங்கதேசம் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் களமிறங்குவதன் மூலமாக விராட் கோலி நான்கு முக்கிய சாதனைகளை உடைப்பதற்கு தயாராக இருக்கிறார். அது விரைவாக இந்த தொடர் மூலமாகவே நிறைவேறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முதலாவதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய வீரர் விராட் கோலி இதுவரை 29 சதங்கள் அடித்து ஜாம்பவான் வீரர் டான் பிராட் மேனனின் சாதனைக்கு சமமாக இருக்கிறார். இன்னும் ஒரு சதம் அடிப்பதன் மூலமாக பிராட்மேன் சாதனையை வீழ்த்தி ஷிவ்நரைன் சந்தர்பால் மற்றும் மேத்யூ ஹைடன் ஆகியோருடன் இணைவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

- Advertisement -

இரண்டாவதாக விராட் கோலிக்கு டெஸ்ட் கிரிக்கட்டில் 9 ஆயிரம் ரன்களைக் கடக்க இன்னும் 152 ரன்கள் தேவைப்படுகிறது. இந்த ரன்களையும் வங்கதேச அணிக்கு எதிரான தொடரில் குவிக்கும் பட்சத்தில் முன்னாள் இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் கிரஹாம் கூச்சின் 8,900 டெஸ்ட் ரன்களை முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம்.

மூன்றாவதாக விராட் கோலி இதுவரை வங்கதேச அணிக்கு எதிராக 9 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி ஒரு அரை சதம் கூட அடித்ததில்லை. எனவே அதையும் இந்த தொடர் மூலமாக நிறைவேற்றுவதற்கு தயாராக இருக்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் விராட் கோலி இதுவரை 30 அரை சதங்கள் அடித்து இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:சிராஜ் சமி போல 140 கிமீ மேல வேகம்.. அந்த பையன வங்கதேச தொடரில் பார்க்க காத்திருக்கிறேன் – கங்குலி பேட்டி

நான்காவதாக விராட் கோலி இன்னும் 32 ரன்கள் குவிக்கும் பட்சத்தில் வங்கதேச அணிக்கு எதிராக அதிக ரன்கள் குவித்த புஜாராவின் சாதனையை முறியடிக்கலாம். இதுவரை புஜாரா அந்த அணிக்கு எதிராக 468 ரன்கள் குவித்துள்ளார். எனவே இந்த நான்கு சாதனைகளையும் விரைவாக முறியடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஏற்கனவே டி20 தொடரில் இருந்து ஓய்வு பெற்றுள்ள விராட் கோலி இனி டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் மட்டுமே கவனம் செலுத்துவார்.

- Advertisement -