ஒரே போட்டியில் 3 சாதனை.. 145 ரன்கள் குவித்த ஜேசன் ராய்.. டி20 கிரிக்கெட்டில் 40 பவுண்டரிகள்

0
2436

பிஎஸ்எல் எனப்படும் பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் குயிட்டா கிளேடியட்டர்ஸ் அணியும், பெஷ்வார் சால்மி அணியும் பலப்பரீட்சை நடத்தியது. இந்த ஆட்டத்தில் தான் பல்வேறு சாதனைகள் உடைக்கப்பட்டது. ராவல்பிண்டியில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெஷ்வார் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

ராவல்பிண்டி ஆடுகளம் தார் சாலை போல் இருந்ததால் பேட்டிங்கிற்கு அவ்வளவு ஈஸியாக இருந்தது. முதலில் பேட்டிங் செய்த பெஷ்வார் அணியின் , தொடக்க வீரர்கள் பாபர் அசாம், சயிம் அயூப் ஆகியோர் பந்துகளை சிதறடித்தனர். இதில் சயிம் அயூப் 34 பந்துகளில் 74 ரன்கள் அடித்தார். 5 சிக்சர்களும், 6 பவுண்டரிகளையும் அயூப் விளாசினார்.

இதே போன்று அதிரடி ஆட்ட்த்தை வெளிப்படுத்திய பாபர் அசாம், தன் மீது ஸ்ட்ரைக் ரேட் குறித்து வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கு தனது பேட் மூலம் பதிலடி கொடுத்தார். 32 பந்துகளில் அரைசதம் கடந்த பாபர் அசாம், 60 பந்துகளில் சதத்தை பூர்த்தி செய்தார். பாபர் அசாம் நன்றாக விளையாடி கொண்டிருந்த நிலையில், 65 பந்துகளில் 115 ரன்கள் எடுத்து ரன் அவுட் ஆனார். இத் இன்னிங்சில் பாபர் அசாம் 15 பவுண்டரிகளும், 3 சிக்சர்களும் சேர்த்தார்.

இன்னிங்ஸ் இறுதியில் ரோமன் போவெல் 35 ரன்கள் சேர்க்க, பெஷ்வார் அணி 2 விக்கெட் இழப்பிற்கு 240 ரன்கள் சேர்த்தது.இதனை தொடர்ந்து 241 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இமாலய இலக்தை எதிர்கொண்ட குயிட்டா கிளேடியட்டர்ஸ் அணிக்கு அபார தொடக்கத்தை . தொடக்க வீரர் மார்டின் குப்தில் கொடுத்தார். 8 பந்துகளில் 21 ரன்கள் சேர்த்து அவர் பெவிலியன் திரும்ப, வில் ஸ்மித் 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

- Advertisement -

வங்கதேச தொடர் முடிந்த உடன் பாகிஸ்தான் திரும்பிய ஜேசன் ராய், மைதானத்தின் அனைத்து பக்கஙகளிலும் பந்தை பறக்க விட்டார். 22 பந்தில் ஜேசன் ராய் 50 ரன்களை கடக்க, அதன் பிறகு தன்னுடைய அதிரடி ஆட்டத்தை மூன்றாவது கீயரிலிருந்து ஐந்தாவது கியருக்கு நகர்த்தினார். இதன் மூலம் ஜேசன் ராய் 44 பந்தில் சதம் விளாசினார்.

கடைசி வரை நின்ற ராய் 63 பந்தில 145 ரன்கள் விளாசி, பிஎஸ்எல் தொடரில் தனிநபர் அதிகபட்ச ஸ்ர் அடித்த வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். இந்த ஆட்டத்தின் மூலம் பத்து பந்துகள் மிச்சம் இருந்த நிலையில் 241 ரன்கள் என்ற இமாலய இலக்கை குயிட்டா கடந்தது. இதே போன்று டி20 கிரிக்கெட் சரித்திரத்தில் வெற்றிக்கரமாக சேஸிங் செய்யப்பட்ட 3வது அதிகபட்ச ஸ்கோர் என்ற பெருமையை குயிட்டா அணி பெற்றது. இந்தப் போட்டியில் குயிட்டா அணி 30 பவுண்டரிகளையும், 10 சிக்சர்களையும் அடித்தது மற்றொரு சாதனையாக பார்க்கப்படுகிறது