அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கும் டி20 உலக கோப்பை தொடரில் இந்தியாவின் 14 வயதான வைபவ் சூரியவன்சி ஏன் விளையாட முடியாது என்பதற்கான காரணத்தை பார்க்கலாம்.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு 14 வயதான வைபவ் சூரியவன்சி 1.10 கோடி ரூபாய்க்கு வாங்கப்பட்டார். மேலும் குஜராத் அணிக்கு எதிராக தனது மூன்றாவது ஐபிஎல் போட்டியில் 35 பந்தில் அதிரடி சதம் அடித்து பல சாதனைகளைப் படித்து அனைவரது கவனத்தையும் கவர்ந்திருக்கிறார்.
கடந்த ஆண்டு அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் நாடுகளில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையை ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி தற்போது நடப்பு டி20 உலக சாம்பியன் ஆக இருந்து வருகிறது. இந்த நிலையில் அடுத்த டி20 உலகக் கோப்பை அடுத்த ஆண்டு இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெற இருக்கிறது.
இந்த நிலையில் மிகச் சிறப்பாக விளையாடி காட்டி இருக்கும் வைபவ் சூரியவன்சி அடுத்த ஆண்டு நடைபெற இருக்கும் டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாட வேண்டுமென சில இந்திய ரசிகர்கள் தெரிவித்து வருகிறார்கள். ஆனால் ஐசிசி விதிகளின்படி அவர் விளையாட முடியாது அதே சமயத்தில் பிசிசிஐ மனது வைத்தால் விளையாடவும் முடியும்.
தற்போது வைபவ் சூரியவன்சிக்கு 14 வயது 34 நாட்கள் ஆகிறது. அடுத்த ஆண்டு மார்ச் மாதத்தில் டி20 உலகக் கோப்பை தொடர் துவங்க இருக்கிறது. எனவே அவருக்கு அப்பொழுது 14 வயது முடிந்திருக்காது. ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு வீரர் அறிமுகமாவதற்கு குறைந்தபட்சம் 15 வயது ஆகி இருக்க வேண்டும் என ஐசிசி விதியை வைத்திருக்கிறார். இதன் காரணத்தால் வைபவ் சூரியவன்சி அடுத்த ஆண்டு டி20 உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு விளையாட முடியாது.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. அதிகாலை 4 மணியாகியும் தூங்கவில்லை.. நட்சத்திர வீரர் சூர்யகுமார் கருத்து
அதே சமயத்தில் ஒரு இளம் வீரர் நல்ல மன முதிர்ச்சியையும் நல்ல திறமையையும் வெளிப்படுத்தி இருந்தால், அவருக்கு 15 வயது ஆவதற்கு முன்பாகவே மிக நெருக்கத்தில் சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமாவதற்கு ஐசிசி அனுமதிக்கவும் செய்கிறது. ஆனால் அதற்கு பிசிசிஐ ஐசிசி-யிடம் சிறப்பு கோரிக்கை வைக்க வேண்டும். அதை ஐசிசி பரிசீலித்து அனுமதி வழங்க வாய்ப்புகள் உண்டு என்பதும் குறிப்பிடத்தக்கது.