ஐபிஎல் 2025.. அதிகாலை 4 மணியாகியும் தூங்கவில்லை.. நட்சத்திர வீரர் சூர்யகுமார் கருத்து

0
10

ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடி இந்திய அணிக்கு வந்து தற்போது கேப்டனாக வளர்ந்திருப்பவர் சூரியகுமார் யாதவ்.சூரியகுமார் யாதவ் ஐபிஎல் தொடரில் சில ஆண்டுகளுக்கு முன்புதான் பெரிய அளவு சாதனை செய்தார்.

ஆனால் அவர் தனது முதல் ஐபிஎல் போட்டியை 2012 ஆம் ஆண்டு விளையாடிவிட்டார் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா. ஆம் மும்பையை சேர்ந்த சூரியகுமார் 2011 ஆம் ஆண்டு உள்நாட்டு கிரிக்கெட் போட்டிகள் அபாரமாக விளையாடிருக்கிறார்.

- Advertisement -

2012 ஆம் ஆண்டே அறிமுகம்:

இதனை அடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி சூரியகுமார் யாதவை 2012 ஐபிஎல் சீசனில் ஏதத்தில் எடுத்தது. எனினும் அந்தத் தொடரில் சூரியகுமார் ஒரே ஒரு ஆட்டத்தில் தான் விளையாடி இருக்கிறார். அதுவும் புனே அணிக்கு  எதிரான ஆட்டத்தில் மார்லன் சாமுவேல்ஸ் வீசிய ஓவரில் நான்கு பந்துகளை எதிர் கொண்டு சூரியகுமார் டக் அவுட் ஆகியிருக்கிறார்.

இதன் பிறகு 2013ஆம் ஆண்டு சீசனில் ஒரு போட்டியில் கூட விளையாடாத சூரியகுமார், 2014 ஆம் ஆண்டு கே கே ஆர் அணிக்காக விளையாடினார் .இந்த நிலையில் தனது முதல் ஐபிஎல் அனுபவம் குறித்து பேசி உள்ள சூரியகுமார் யாதவ், தான் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அறிமுகமாக போகிறேன் எனத் தெரிந்தவுடன் போட்டிக்கு முதல் நாள் இரவு எனக்கு தூக்கமே வரவில்லை.

- Advertisement -

தூங்கவே இல்லை:

காலை நான்கு அல்லது ஐந்து மணிக்கு தான் தூங்கவே சென்றேன்.  ஆர்வத்தில் என்னால் தூங்கவே முடியவில்லை. ஏனென்றால் ஒரு ஐபிஎல் அணிக்காக விளையாடுவது என்பது எனக்கு இதுதான் முதல் முறையாக இருந்தது. மும்பை அணிக்காக விளையாடிய ஒவ்வொரு நொடியும் எனக்கு மகிழ்ச்சியை தான் கொடுத்தது.

இதையும் படிங்க: ஐபிஎல் 2025.. 2 அணிகளின் பார்டியை கெடுக்க போகும் சிஎஸ்கே.. இது நடந்தால் ஒட்டுமொத்த தொடரும் காலி

முதல் போட்டி விளையாடுவதற்கு முன்பு ஒவ்வொரு நொடியும் நான் ஆர்வத்துடன் அனுபவித்தேன். வார்ம் அப் செய்யும்போது எனக்கு ஏற்கனவே வியர்வை கொட்டி இருந்தது என்று சூரியகுமார் யாதவ் கூறினார். சூர்யா மீண்டும் 2018 ஆம் ஆண்டு மும்பை அணியில் திரும்பி தற்போது அந்த அணியில் முக்கிய தூண்களில் ஒருவராக இருந்து வருகிறார். நடப்பு சீசனில் சூரியகுமார்  தொடர்ந்து பத்து  இன்னிங்ஸ் மேலாக 25 ரன்களுக்கு மேல் அடித்து சாதனை படைத்தார். தற்போது சூரியகுமார் 10 போட்டிகளில் விளையாடி 427 ரன்கள் அடித்திருக்கிறார்.

- Advertisement -