2 பீமர் நோ பால் வீசியும்.. வெளியே அனுப்பப்படாத ஆர்சிபி பெர்குசன்.. விதி என்ன சொல்கிறது.?

0
86

நேற்று நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் சென்னை அணியை வீழ்த்தி தொடர்ந்து ஏழாவது முறையாக வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு தற்போது தகுதி பெற்றுள்ளது.

இந்த நிலையில் சென்னை அணியின் மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு லாக்கி பெர்குசன் வீசிய நோ- பால் தற்போது சர்ச்சையை கிளப்பியுள்ளது. பெங்களூர் சின்னசாமி மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 218 ரன்கள் குவித்தது.

- Advertisement -

பின்னர் இலக்கை நோக்கி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களம் இறங்கியது. பெங்களூர் அணி நிர்ணயித்த 218 ரன்கள் இலக்கை எட்ட முடியாவிட்டாலும் 200 ரன்கள் வந்தாலே போதும் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்று விடலாம் என்ற நிலைமையில் களமிறங்கினாலும், அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் கேப்டன் ருத்ராஜ் முதல் பந்திலேயே வெளியேறியது சென்னை அணிக்கு பெரிய பிரச்சினையாக அமைந்தது.

இருப்பினும் சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழ, இறுதியில் மகேந்திர சிங் தோனி மற்றும் ஜடேஜா கூட்டணி போராடினாலும் இறுதியாக 27 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்று ப்ளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது. இந்த சூழ்நிலையில் பெங்களூர் அணி வீரர் லாக்கி பெர்குசன் வீசப்பட்ட இரண்டு நோ-பால் பந்துகள் சர்ச்சையாக உள்ளது.

அதாவது ஆட்டத்தின் 11.2 ஓவரில் ரச்சின் ரவீந்திரா பேட்டிங் செய்து கொண்டிருந்தபோது அவருக்கு பந்து வீசிய லாக்கி பெர்குசன் அந்தப் பந்தை இடுப்புக்கு மேல் நோ -பால் ஆக வீசினார். இடுப்புக்கு மேலே பந்து வீசப்பட்டதால் நோபால் என்று அறிவித்த அம்பயர் அடுத்த பந்தை ஃப்ரீ ஹிட் என அறிவித்தார். அந்த இரண்டு பந்துகளில் மட்டும் 10 ரன்கள் வந்தது. பின்னர் ஆட்டத்தின் 18 வது ஓவரில் மகேந்திர சிங் தோனி பேட்டிங் செய்த போது அப்போதும் பந்து வீசிய லாக்கி பெர்குசன் முதல் பந்தை பீமராக இடுப்புக்கு மேலே நோ பாலாக வீசினார்.

- Advertisement -

பீமர் நோ பால் விதி

41.7.3, 41.7.2 மற்றும் 41.7.4 எம்.சி.சி கிரிக்கெட் விதிப்படி ஒரு பந்துவீச்சாளர் முதல் பந்தை இடுப்புக்கு மேல் நோபால் ஆக வீசினால், அது முதல் மற்றும் இறுதி எச்சரிக்கையாக நடுவரால் அறிவிக்கப்படும். அதே பந்துவீச்சாளர் தொடர்ந்து இரண்டாவது பந்தையும் இடுப்புக்கு மேல் நோ- பாலாக வீசினால் அது பேட்ஸ்மேனுக்கு ஆபத்தை விளைவிக்கும் பொருட்டு அந்தப் பந்துவீச்சாளர் அதற்கு மேல் பந்து வீச அனுமதிக்கப்பட மாட்டார். இந்த காரணத்தால் லாக்கி பெருக்குசன் 18வது ஓவரை வீசி இருக்கக் கூடாது.

இதையும் படிங்க:ருதுராஜ் கேப்டன்சியில் செய்த பெரிய 2 தவறு.. ஆனால் கச்சிதமாக செய்த பிளேசிஸ்.. சிஎஸ்கே தோல்விக்கு காரணம்

ஆனால் பீமராக வீசப்பட்ட அந்த பந்து பேட்ஸ்மேனுக்கு எந்த ஒரு சேதாரத்தையும் விளைவிக்கும் வகையில் இல்லாத காரணத்தினால் நடுவரின் இறுதி முடிவுக்கு பிறகு லாக்கி பெர்குசன் பந்து வீச அனுமதிக்கப்பட்டார். சீனியர் வீரர்கள் என்ற முறையில் தோனி மற்றும் ஜடேஜா இதற்கு அப்பீல் செய்ய,மெதுவாக வீசப்பட்ட பந்து தலைக்கு மேலே சென்றது. அந்த பந்து எந்த விளைவையும் ஏற்படுத்தாத காரணத்தினால்தான் அவர் தொடர்ந்து பந்து வீச அனுமதிக்கப்படுகிறார் என்ற விளக்கமும் கொடுக்கப்பட்டது. ஆனால் இதனை சிஎஸ்கே ரசிகர்கள் பெர்குசன் அந்த ஓவரை தொடர்ந்து வீசி இருக்கக் கூடாது என்றும் அவருக்கு தடை விதிக்கப்பட்டிருக்க வேண்டும் என்றும் தங்கள் கருத்துக்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.