நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் செய்த ஒரு புத்திசாலித்தனமான காரியம் லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு 6.25 கோடி ரூபாய் இழப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
இதுவரையில் ஐபிஎல் வரலாற்றில் மிக அதிகபட்ச தொகையாக 27 கோடி ரூபாய் கொடுத்து லக்னோ அணி நடப்பு ஐபிஎல் மெகா ஏலத்தில் ரிஷப் பண்ட்டை வாங்கி இருக்கிறது. இந்த நிலையில் லக்னோ அணியை இவ்வளவு விலை கொடுத்து டெல்லி அணி சாமர்த்தியமாக வாழ வைத்தது.
வரலாறு படைத்த ரிஷப் பண்ட்
இந்த முறை ரிஷப் பண்ட் ஏலத்தில் வந்ததும் லக்னோ அணியும் மோதின. இதற்கு அடுத்தது பெங்களூர் அணி விலகிக் கொள்ள ஹைதராபாத் அணி லக்னோ அணியுடன் மோதியது. இந்த நிலையில் லக்னோ 20.75 கோடி ரூபாய்க்கு கேட்க ஹைதராபாத் விலகியது.
இதைத் தொடர்ந்து தன்னிடமிருந்த ஆர்டிஎம் மூலம் டெல்லி களத்தில் குதித்தது. இது தொடர்ந்து லக்னோ அணியிடம் கடைசி வாய்ப்பாக ரிஷப் பண்ட்டுக்கு எவ்வளவு தர விரும்புகிறீர்கள்? என்று கேட்கப்பட்டது. லக்னோ அணி உடனடியாக 27 கோடி ரூபாய் தருவதாக கூறவும், அந்த விலைக்கு தாங்கள் ரிஷப் பண்ட்டை வாங்க விரும்பவில்லை என டெல்லி விலகிக் கொண்டது. எனவே ஐபிஎல் ஏல வரலாற்றில் ரிஷப் பண்ட் அதிக விலைக்கு ஏலம் போனார்.
டெல்லி செய்த புத்திசாலித்தனமான காரியம்
டெல்லி அணியில் இருந்துதான் ரிஷப் பண்ட் வெளியில் வந்தார். எனவே அவரை மீண்டும் அந்த அணியை வாங்க செல்லாது என்று அனைவரும் நினைத்தார்கள். அவர்களும் ரிஷப் பண்ட் வேண்டாம் என்றுதான் பஞ்சாப் உடன் ஸ்ரேயாஸ் ஐயருக்கு போட்டியிட்டார்கள்.
இதையும் படிங்க : பஞ்சாப் பணத்தை வீணா தொலச்சிட்டீங்க.. இந்த வேலையை உலகமே எதிர்பார்க்கல – டாம் மூடி விமர்சனம்
இந்த நிலையில் தான் 20.75 கோடி ரூபாய்க்கு ரிஷப பண்ட்டை லக்னோவுக்கு விட்டுத்தரக்கூடாது என வேண்டுமென்றே ஆர்டிஎம்-மை பயன்படுத்தி டெல்லி உள்ளே வந்தது. அவர்கள் நினைப்பது போலவே அங்கிருந்து லக்னோ அணி மேற்கொண்டு 6.25 கோடி ரூபாயை சேர்த்து 27 கோடி ரூபாய்க்கு ரிஷப் பண்ட்டை கேட்டது. உடனே டெல்லி ஏலத்தில் இருந்து விலகியது. டெல்லி புத்திசாலித்தனமாக செய்த காரியத்தால் லக்னோவுக்கு ஆறு புள்ளி 25 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது.






