பஞ்சாப் பணத்தை வீணா தொலச்சிட்டீங்க.. இந்த வேலையை உலகமே எதிர்பார்க்கல – டாம் மூடி விமர்சனம்

0
1058
Shreyas

ஐபிஎல் வரலாற்றில் இரண்டாவது அதிக தொகைக்கு ஸ்ரேயாஸ் ஐயரை ஏலத்தில் எடுத்திருக்கும் பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்தை டாம் மூடி கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

தற்போது அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் ஐபிஎல் தொடருக்கான மெகா ஏலம் தற்பொழுது சவுதி அரேபியா ஜெட்டா நகரில் நடந்து வருகிறது. இந்த ஏலத்தில் நம்ப முடியாத சில வீரர்கள் அதிகமாகவும் குறைந்த பணத்திற்கும் சென்று இருக்கிறார்கள்.

- Advertisement -

ஏலத்தில் பஞ்சாப் செய்த காரியம்

இந்த முறை ஏலத்தில் அதிக பணம் கையில் வைத்திருந்த பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகம் ரிஷப் பண்ட்டை 30 கோடி ரூபாய்க்கு சென்றாவது வாங்கும் என பலரும் எதிர்பார்த்து இருந்தார்கள். இந்த நிலையில் ரிஷப் பண்ட் ஏலத்தில் வருவதற்கு முன்பாகவே ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் வந்தார்.

இந்த நிலையில் முதலில் பஞ்சாப் மற்றும் டெல்லி அணிகள் மோதின. பஞ்சாப் ஏழு கோடி ரூபாய்க்கு வெளியேறிவிட்டது. இந்த நிலையில் 9.75 கோடி ரூபாய்க்கு அடுத்து வந்த கொல்கத்தா அணியும் வெளியேறிவிட்டது. இதைத் தொடர்ந்து மீண்டும் உள்ளே வந்த பஞ்சாப் அணி டெல்லி அணியுடன் கடுமையாக மோதியது.

- Advertisement -

இந்த நிலையில் ஸ்ரேயாஸ் ஐயர் ஏலத்தில் 10 கோடி மற்றும் 15 கோடி என தாண்டி 20 கோடியையும் கடந்தார். ஆனால் இரு அணிகளும் விட்டுக் கொடுக்காமல் மோத 25 கோடியை தொட்டார். இந்த நிலையில் இறுதியாக பஞ்சாப் கிங்ஸ் அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் அவரை 26.75 கோடி ரூபாய்க்கு வாங்கியது.

உலகமே எதிர்பார்க்காதது

இதுகுறித்து ஆஸ்திரேலியா முன்னாள் வீரர் டாம் மூடி கூறும் பொழுது “பஞ்சாப் இந்த முறையை பல கோடியை பாக்கெட்டில் வைத்துக் கொண்டு வந்தது. இப்போது அர்ஸ்தீப் சிங் 18 கோடி மற்றும் ஸ்ரேயாஸ் ஐயரை 26.75 கோடிக்கு வாங்கியதன் மூலம் இரண்டே வீரர்களுக்கு பெரிய தொகையை செலவு செய்து விட்டது”

இதையும் படிங்க : 534 ரன் டார்கெட்.. விராட் கோலி அதிரடி சதம்.. ஆஸியில் யாரும் செய்யாத சாதனை.. பெர்த் முதல் டெஸ்ட்

“பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்வாகத்திடம் அதிக பணம் இருந்ததால் அவர்கள் கடினமாக ஏலத்தில் செல்வார்கள் என்று தெரியும். ஆனால் இந்த வீரர்களுக்கு இவ்வளவு பணத்திற்கு செல்வார்கள் என்று இந்த உலகமே எதிர்பார்க்கவில்லை. தேவையில்லாமல் இவ்வளவு பணத்தை வழக்கம்போல் கொட்டி விட்டார்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -