இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நிலையில் குறிப்பாக இந்திய அணி நான்காவது நாளில் இருந்து தனது அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி அணியின் முக்கிய நிர்வாகி ப்ளே ஆஃப் தொடரில் பெங்களூர் அணி சென்னை அணியை வெளியேற்றியதையும், இந்திய அணி அதிரடியான ஆட்டத்தை வங்கதேச அணிக்கு எதிராக விளையாடியதை தொடர்பு படுத்தி பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
இந்தியா மற்றும் வங்கதேச அணிகளுக்கு இடையேயான இரண்டாம் டெஸ்ட் போட்டியில் முதல் மூன்று நாட்கள் மழை பெய்திருந்த நிலையில் நான்காவது நாள் ஆட்டத்தில் இருந்து வங்கதேச அணியை விரைவாக வீழ்த்தி இந்திய அணி தனது அதிரடி ஆட்டத்தை துவங்கியது. மேலும் கடைசி நாளான இன்று இரண்டாவது இன்னிங்ஸிலும் வங்கதேச அணியை குறைவான ரன்களுக்கு கட்டுப்படுத்தி மிக விரைவாக வெற்றி இலக்கை அடைந்தது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணிக்கு பல முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் கிரிக்கெட் விமர்சகர்களும் பாராட்டு தெரிவித்து வரும் நிலையில் நேற்று நடைபெற்ற நான்காவது நாள் ஆட்டத்தில் இந்திய அணி தனது ஆதிக்கமான ஆட்டத்தை வெளிப்படுத்தியதை தொடர்ந்து ஐபிஎல் அணிகளில் ஒன்றான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் முக்கிய நிர்வாகி நாக் என்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை தாக்கும் விதமாக பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.
அதில் அவர் “அன்பான அண்டை வீட்டாரே (பக்கத்து நாடான வங்கதேசம்) இன்றைய டீம் இந்தியாவின் அதிரடியான ஆட்டத்தை பார்த்து உங்களது இல்லங்களில் இருக்கும் டிவிகளை அடித்து நொறுக்காதீர்கள்” என்று பதிவினை வெளியிட்டார். அதாவது நான்காவது நாள் ஆட்டத்திற்கு முந்தைய தினத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெறாமல் ஆர்சிபி அணியிடம் தோல்வி பெற்று வெளியேறியதைத் தொடர்ந்து சிஎஸ்கே வீரர் மகேந்திர சிங் தோனி ட்ரெஸ்ஸிங் ரூமில் இருந்த டிவியை அடித்து உடைத்ததாக ஹர்பஜன் சிங் தன்னிடம் கூறினார் என பத்திரிகையாளர் ஒருவர் பேசி வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.
எனவே இந்த நிகழ்வை ஆர்சிபி அணியின் முக்கிய நிர்வாகி இந்தப் போட்டியோடு தொடர்பு படுத்தி சிஎஸ்கேவை கிண்டல் அடிக்கும் விதமாக பக்கத்து நாட்டினர் யாரும் டிவியை அடித்து நொறுக்க வேண்டாம் என்று பதிவினை வெளியிட்டு இருக்கிறார். இது தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் சிஎஸ்கே ரசிகர்கள் கோபத்தில் இருக்கின்றனர்.
இதையும் படிங்க:இந்தியாவுக்கு சிறப்பான வெற்றிதான்.. ஆனால் இந்த காரணத்தால் ரோஹித் சந்தோசப்பட மாட்டார் – அஜய் ஜடேஜா கருத்து
இருப்பினும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றாலும் இறுதிப்போட்டிக்கு முன்னேறாமல் அரை இறுதி ஆட்டத்தில் தோல்வியடைந்து வெளியேறியது குறிப்பிடத்தக்கது.
Dear neighbours, don’t smash yuvar TVs after watching Team India’s performance today. Peas! ✌️
— Royal Challengers Bengaluru (@RCBTweets) September 30, 2024
-Mr. Nags pic.twitter.com/6CS0bJJpo7