இன்று பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி வீரர் ரொமாரியோ ஷெப்பர்ட் 14 பந்தில் அரை சதம் அடித்து புதிய சாதனையை நடப்பு ஐபிஎல் தொடரில் படைத்திருக்கிறார்.
இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற சிஎஸ்கே அணி பந்து வீசுவதாக அறிவித்தது. ஆர்சிபி அணிக்கு பில் சால்ட் இந்த போட்டியில் விளையாடாத காரணத்தினால் தொடக்க ஆட்டக்காரர்களாக விராட் கோலி மற்றும் இங்கிலாந்தின் இளம் வீரர் ஜேக்கப் பெத்தேல் இருவரும் களமிறங்கினார்கள்.
தொடக்க ஆட்டக்காரர்கள் அதிரடி
முதலில் பேட்டிங் செய்ய வந்த ஆர்சிபி அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் மிகச் சிறப்பான துவக்கத்தை கொடுத்தார்கள். ஜேக்கப் பெத்தேல் 33 பந்தில் 55 ரன்கள், விராட் கோலி 33 பந்தில் 62 ரன்கள் எடுத்து வலிமையான அடித்தளத்தை உருவாக்கிக் கொடுத்தார்கள். இதைத் தொடர்ந்து படிக்கல் 15 பந்தில் 17 ரன்கள், ரஜத் பட்டிதார் 17 பந்தில் 15 ரன்கள் எடுத்தார்கள்.
ஒரு கட்டத்தில் ஆர்சிபி அணி 200 ரன்கள் தாண்டும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிஎஸ்கே அணி சிறப்பாக திருப்பி வந்து 180 ரன்னில் ஆர்சிபி அணியை கட்டுப்படுத்தும் அளவுக்கு முன்னேறி வந்தது. சிஎஸ்கே அணிக்கு இந்த போட்டியில் வெல்லும் ஒரு வாய்ப்பு உருவானது. இந்த நிலையில் உள்ளே வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் மொத்தத்தையும் கலைத்துப் போட்டார்.
ரொமாரியோ ஷெப்பர்ட் ருத்ர தாண்டவம்
இந்த கட்டத்தில் பேட்டிங் செய்ய வந்த ரொமாரியோ ஷெப்பர்ட் கலீல் அகமது வீசிய ஆட்டத்தின் 19 ஆவது ஓவரில் 4 சிக்ஸர்கள் மற்றும் 2 பவுண்டரிகள் விளாசினார். இதற்கு அடுத்து பத்திரனா வீசிய 20வது ஓவரில் 2 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் நொறுக்கினார். இதைத் தொடர்ந்து அவர் வெறும் 14 பந்தில் 4 பவுண்டரிகள் மற்றும் 6 சிக்ஸர்களுடன் ஆட்டம் இழக்காமல் 53 ரன்கள் குவித்தார்.
இதன் காரணமாக ஆர்சிபி அணி யாரும் எதிர்பார்க்காத வகையில் 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 213 ரன்கள் குறித்தது. மேலும் ரொமாரியோ ஷெப்பர்ட் நடப்பு ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதத்தையும், ஐபிஎல் தொடரில் ஒட்டுமொத்தமாக இரண்டாவது அதிவேக அரைசதத்தையும் அடித்து அசத்தினார்.
இதையும் படிங்க : எங்க டீம்ல யாருக்குமே இல்லாத உரிமை.. 14 வயசு வைபவுக்கு இருக்கு.. பயத்தை கொடுக்காம பாதுகாத்து வரோம் – ராஜஸ்தான் கோச்
ஐபிஎல் தொடரில் அதிவேக அரைசதங்கள் :
ஜெய்ஸ்வால் – 13 பந்துகள்
ரொமாரியோ ஷெப்பர்ட் – 14 பந்துகள்
கேஎல்.ராகுல் – 14 பந்துகள்
பாட் கம்மின்ஸ் – 14 பந்துகள்
பிரேசர் மெக்கார்க் – 15 பந்துகள்






