ஆன்டி பிளவர் கிட்ட அத முன்னவே சொல்லிட்டேன்.. மாறுவேஷத்துல அந்த ஆசீர்வாதம் கிடைச்சது – பில் சால்ட் பேச்சு

0
226
Salt

நேற்று ஐபிஎல் முதல் தகுதி சுற்று போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிராக பஞ்சாப் முல்லன்பூர் மைதானத்தில் ஆர்சிபி அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் அணியாக இறுதிப் போட்டிக்குப் தகுதி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் துவக்க ஆட்டக்காரர் பில் சால்ட் பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் ஆடுகளத்தில் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு நல்ல சாதகம் இருந்தது. கூடுதல் பவுன்ஸ் கிடைத்தவுடன் பந்து ஆடுகளத்தில் பட்டு நகரவும் செய்தது. அதே சமயத்தில் பஞ்சாப் வழக்கமாக அதிரடியாக விளையாடுவதை பாணியாக வைத்திருப்பதால், தொடர்ந்து பெரிய ஷாட்டுகளை ஆடுவதற்கு சென்று வெறும் 121 ரன்னில் ஆல் அவுட் ஆனார்கள்.

- Advertisement -

பில் சால்ட் அதிரடி

இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி அதிரடியாக ஆரம்பித்தாலும் கூட பஞ்சாப் கிங்ஸ் பந்து வீச்சாளர்களும் ஆடுகளத்தின் சாதகத்தை பயன்படுத்தி சிறப்பாக பந்து வீச ஆரம்பித்தார்கள். இதன் காரணமாக ஜெமிசன் பந்துவீச்சில் விராட் கோலி ஆட்டம் இழந்து வெளியே செல்ல திடீரென ஆட்டத்தில் ஒரு பரபரப்பு காணப்பட்டது.

இந்த நிலையில் தொடக்க ஆட்டக்காரர் பில் சால்ட் எதையும் கண்டு கொள்ளாமல் வழக்கமான அதிரடியில் இறங்கி இறுதிவரை ஆட்டமிழக்காமல் நின்று 27 பந்தில் 56 ரன்கள் எடுத்து 10 ஓவரில் எட்டு விக்கெட் இழப்புக்கு ஆர்சிபி அணியை வெற்றி பெற வைத்தார். முக்கியமான நேரத்தில் காயத்திற்கு பிறகு திரும்பி வந்த அவர் சிறப்பாக விளையாடி அணிக்கு நம்பிக்கை அளித்திருக்கிறார்.

- Advertisement -

மாறுவேடத்தில் வந்த ஆசிர்வாதம்

இந்த போட்டி குறித்து பில் சால்ட் பேசும் பொழுது ” இது மிகவும் சிறப்பான உணர்வாக இருக்கிறது. ஆடுகளத்தில் பந்து நகர செய்தது உதவியாக அமைந்தது. மேலும் இது நாங்கள் விளையாடியதில் மிக மோசமான ஆடுகளம் எல்லாம் கிடையாது. என் மனதில் தோன்றியது எல்லாமே அர்ஷ்தீப் சிங்கிடம் அவுட் ஆகி விடாதே என்பதுதான். ஏனென்றால் கடைசி இரண்டு போட்டிகளில் அவர் என்னை இரண்டு பேரும் விதமாக அவுட் செய்திருந்தார்”

இதையும் படிங்க : 400 ரன்.. வெஸ்ட் இண்டீஸை பந்தாடிய இங்கிலாந்து அணி.. மெகா ரன் வித்தியாசத்தில் வெற்றி.. முதல் ODI

“விளையாட்டு பிறகு பயணம் பிறகு விளையாட்டு என நாங்கள் இருப்பது எங்களுக்கு மாறுவேடத்தில் கிடைத்த ஆசீர்வாதம் ஆகவே பார்க்கிறேன். வெளி மைதானங்களில் நாங்கள் தொடர்ந்து வெற்றி பெறுவது இப்படியானதாகத்தான் இருக்கிறது. இது பற்றி நான் போட்டிக்கு முன்பாகவே கோச் ஆன்டி பிளவர் இடம் சொல்லி இருந்தேன். தொடரின் கடைசியில் நீங்கள் ஏதாவது ஒரு வகையில் அணிக்கு பங்களிப்பு செலுத்த வேண்டும். அது உங்களால் முடியும்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -