ஏன்பா ஆர்சிபி அவரை போக விட்டீங்க.? – மும்பை ராஜஸ்தான் போட்டியின் போது வாட்சன் வருத்தம்

0
2573

மும்பை இந்தியன்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகளுக்கிடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் சகால் ஆட்டத்தின் திருப்புமுனையாக முக்கிய மூன்று விக்கெடுகளை எடுத்தார். இதுகுறித்து ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல் ரவுன்டர் வாட்சன் ஆர்சிபி அணிக்கு சில கேள்விகளை எழுப்பி உள்ளார்.

மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் அணியின் முதல் முக்கிய மூன்று விக்கெட்டுகளை வேகப்பந்துவீச்சாளர் ட்ரென்ட் போல்ட் வீழ்த்தினார். அதன் பிறகு அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் பந்துவீச்சை சமாளித்து ரண்களைக் கொண்டு வர முயற்சித்து இருந்தனர்.

- Advertisement -

இருவரும் தலா 30 ரன்களுக்கு மேல் குவித்த நிலையில், ஆட்டம் கொஞ்சம் கொஞ்சமாக மும்பை இந்தியன்ஸ் அணியின் பக்கம் திரும்புவது போல் தெரிந்தது. இதற்குப் பிறகு சுழற் பந்துவீச்சாளர் சகால் சிறப்பாக பந்து வீசி கேப்டன் ஹார்த்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தி திருப்புமுனையை ஏற்படுத்தினார்.

அதுவே ராஜஸ்தான் ராயல்ஸ் அணி மீண்டும் ஆட்டத்திற்குள் வர வழி வகுத்தது. பின்னர் 32 ரன்கள் குவித்திருந்த இடது கை ஆட்டக்காரர் திலக் வர்மாவின் விக்கெட்டை சகாலே வீழ்த்தி மும்பை அணியின் வீழ்ச்சி பாதைக்கு வித்திட்டார். எனவே இவரது அபார பந்துவீச்சால் மும்பை இந்தியன்ஸ் அணி 125 ரன்கள் மட்டுமே குவிக்க முடிந்தது. அதன் பிறகு களம் இறங்கிய ராஜஸ்தான் ராயல்ஸ் அணியினர் இளம் வீரர் பராக்கின் சிறந்த ஆட்டத்தால் 15 ஓவர்களில் வெற்றி இலக்கை அடைந்தது.

சகாலின் அற்புதமான ஸ்பெல்லை பாராட்டிய ஆஸ்திரேலியாவின் முன்னாள் ஆல் ரவுண்டர் சேன் வாட்சன் சகாலை ஆர்சிபி அணி ஏன் தக்க வைக்கவில்லை என்ற கேள்வியும் எழுப்பினார். இது குறித்த அவர் கூறும் பொழுது ” சஹால் சர்வதேச கிரிக்கெட்டிலும், ஐபிஎல் தொடரிலும் நீண்ட காலமாக விளையாடி சாதனை படைத்துள்ளார். சகால் அதிக ரன்களை விட்டுக் கொடுக்காமல் சிறந்த பேட்ஸ்மேன்களை வெளியேற்றி இருக்கிறார். இவரை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி பெற்றிருப்பது அதிர்ஷ்டம்.

- Advertisement -

இந்த ஆட்டத்தில் ஹர்திக் பாண்டியாவின் விக்கெட்டை வீழ்த்தி பெரிய திருப்புமுனை ஏற்படுத்திக் கொடுத்தார். இப்படிப்பட்ட ஒரு சிறந்த வீரரை ஆர்சிபி எதுனால போக விட்டீங்க.?. நான் தொடர்ந்து இதை சொல்லுவேன்” என்று கூறி இருக்கிறார். 2022ஆம் ஆண்டு மெகா ஏலத்தின் போது ஆர்சிபி அணிக்காக சஹாலை திரும்பவும் எடுப்பதாக உறுதி அளித்தனர்.

இதையும் படிங்க: மும்பையை ஜெயிச்ச காரணம் வேற.. போட்டிக்கு முன்பே நடந்த திருப்புமுனை – ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி

ஆனால் ஏலத்தின் போது அதற்கான எந்த முயற்சியையும் ஆர்சிபி அணி எடுக்கவில்லை என்றும், அதனால் 2-3 நாட்கள் பயிற்சியாளரிடம் பேசவில்லை என்றும், அதன் பிறகு ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது பெங்களூர் அணி வீரர்கள் யாரிடமும் பேசவில்லை என்றும் சஹால் கூறி இருந்தது குறிப்பிடத்தக்கது