ஆர்சிபி குவாலிபயர்-1ல் குஜராத் அணியுடன் மோதும் அற்புத வாய்ப்பு! அதற்கு ஆர்சிபி கடைசி லீக் போட்டியை எப்படி ஜெயிக்க வேண்டும்? மற்ற அணிகள் முடிவு எப்படியிருக்க வெண்டும்?

0
633

பிளே-ஆப் குவாலிஃபயர்-1 க்கு தகுதி பெற்றுள்ள குஜராத் அணியுடன் ஆர்சிபி அணி மோதுவதற்கான வாய்ப்புகளும் இப்போது சாத்தியமாகியுள்ளது. அதற்கு என்னென்ன நடக்கவேண்டும்? ஆர்சிபி அணி கடைசி லீக் போட்டியில் என்ன செய்ய வேண்டும்? என்பதை பின்வருமாறு காண்போம்.

குஜராத் டைட்டன்ஸ் அணி 13 போட்டிகளில் 18 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. அத்துடன் குவாலிஃபயர்-1ல் விளையாடுவதற்கும் தகுதி பெற்றுள்ளது. மீதம் இருக்கும் மூன்று இடங்களுக்கு சிஎஸ்கே, லக்னோ, மும்பை மற்றும் ஆர்சிபி ஆகிய அணிகளுக்கு இடையே கடும் போட்டி நிலவி வருகிறது. மற்ற அணிகள் ஏறக்குறைய வெளியேறிவிட்டனர்.

- Advertisement -

11 போட்டிகளில் 10 புள்ளிகளை பெற்றிருந்த ஆர்சிபி அணி, கடந்த இரண்டு லீக் போட்டிகளில் ராஜஸ்தான் மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் ஆகிய அணிகளை அபாரமாக வெற்றி பெற்று நல்ல ரன்ரேட் பெற்றதோடு தற்போது நான்காவது இடத்திற்கும் முன்னேறியுள்ளது. தற்போது 13 போட்டிகளில் 14 புள்ளிகள் பெற்று இருக்கிறது.

ஆர்சிபி அணி தனது கடைசி லீக் போட்டியை குஜராத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இதில் வெற்றி பெற்றால் 16 புள்ளிகள் பெற்று பிளே-ஆப் சுற்றுக்குள் செல்லும் வாய்ப்புகள் பெறும்.

இப்படி ஒரு சூழல் நிலவுகையில், மற்றொரு பக்கம் ஆர் சி பி அணி புள்ளி பட்டியலில் இரண்டாவது இடம் பெற்று குவாலிஃபயர்-1ல் குஜராத் அணிக்கு எதிராக விளையாடுவதற்கும் தற்போது அனேக வாய்ப்புகள் உருவாகியுள்ளன. அதற்கு என்னென்ன நடக்க வேண்டும்? என்பதை பின்வருமாறு காண்போம்.

- Advertisement -

முதலாவதாக, 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் இருக்கும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோல்வியை தழுவவேண்டும்.

அடுத்ததாக, 13 போட்டிகளில் 15 புள்ளிகளுடன் இருக்கும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இதில் லக்னோ அணி தோல்வியை தழுவவேண்டும்.

கடைசியாக, 13 போட்டிகளில் 14 புள்ளிகளுடன் இருக்கும் மும்பை இந்தியன்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியை ஹைதராபாத் அணிக்கு எதிராக விளையாடுகிறது. இப்போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றிபெற வேண்டும்.

இவை அனைத்தும் நடைபெற்றால் 16 புள்ளிகளில் இருக்கும் ஆர்சிபி அணி புள்ளி பட்டியலில் இரண்டாம் இடத்தில் இருக்கும். லக்னோ மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகள் 15 புள்ளிகளில் இருக்கும். ரன்ரேட் அடிப்படையில் மூன்றாவது மற்றும் நான்காவது இடத்தை பிடிப்பர்.

முதல் இரண்டு இடங்களை பிடித்த அணிகளுக்கு குவாலிபயர்-1 நடைபெறும். அதில் குஜராத் மற்றும் ஆர்சிபி அணிகள் மோதுவதற்கான சூழலும் ஏற்பட்டிருக்கும்.