கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பும் சித்து.. 2008-யே ஒரு போட்டிக்கு இத்தனை லட்சமா?.. அவரே வெளியிட்ட தகவல்

0
149
Sidhu

இந்திய கிரிக்கெட்டில் நவ்ஜோத் சிங் சித்து மிகவும் பிரபலமாக அறியப்பட்ட ஒரு பெயர். இந்திய அணியில் அதிரடி துவக்க ஆட்டக்காரராக வீரேந்திர சேவாக்குக்கு முன்னாள் முன்னோடியாக இருந்தவர். இவரை அப்போதைய இந்திய ரசிகர்கள் சிக்ஸர் சித்து என்று அழைப்பார்கள். டெஸ்ட் போட்டியிலேயே அந்த காலத்தில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்த பேட்ஸ்மேன்.

இந்திய அணிக்காக 1983 ஆம் ஆண்டு அறிமுகமான இவர் 16 ஆண்டுகள் மேற்கொண்டு விளையாடிய 1999 ஆம் ஆண்டு ஓய்வு பெற்றார். இந்திய அணிக்காக 51 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3202 ரன்கள், 136 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 4413 ரன்கள் எடுத்திருக்கிறார்.

- Advertisement -

இவர் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின்னால் நேரடியாக கிரிக்கெட் வர்ணனை செய்வதற்கு சென்றார். இவருடைய கிரிக்கெட் வர்ணனை மிகவும் நகைச்சுவையான ஒன்றாக அமைந்திருந்தது. இதன் காரணமாக சில நாட்களிலேயே இவருடைய கிரிக்கெட் வர்ணனைக்கு பெரிய ரசிகர் கூட்டம் உருவானது.

இதற்குப் பின்னால் இவர் தனியார் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிக்கு சென்றார். பிறகு அரசியலிலும் நுழைந்தார். தற்போது மீண்டும் இவர் கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்ப வந்திருக்கிறார். கிரிக்கெட் வர்ணனையில் தனி பாணியை உருவாக்கியவர்களில் இந்தியாவில் இருந்து நவ்ஜோத் சிங் சித்து மிகவும் முக்கியமானவர்.

ஒரு ஐபிஎல் போட்டிக்கு இத்தனை லட்சமா?

தற்போது கிரிக்கெட் வர்ணனைக்கு திரும்பி இருக்கும் நவ்ஜோத் சிங் சித்து பேசும் பொழுது ” நான் விராட் கோலியை மிகச் சிறந்த இந்திய வீரராக மதிப்பிடுவேன். அவருடைய உடல் தகுதி மிகச் சிறப்பான ஒன்றாக இருக்கிறது. பழைய மதுபோல நாளுக்கு நாள் அவர் மெருகேறி வருகிறார். மேலும் அவர் டெக்னிக்கலாக மிகவும் சிறந்த பேட்ஸ்மேன். அத்தோடு மூன்று வடிவ கிரிக்கெட்டுக்கும் ஏற்றார் போல் தன்னை அட்ஜஸ்ட் செய்து கொள்வதில் அவர் வினோதமான திறமையை அபாரமாக வைத்திருக்கிறார்.

- Advertisement -

என்னுடைய காலத்தில் பார்மில் இல்லை என்றாலும் மக்கள் உங்களை பின் தொடர்வார்கள். ஏனென்றால் சரியான மாற்று வீரர்கள் இல்லை. இப்பொழுது நிறைய பேர் இருக்கிறார்கள். இதனால்தான் ரோஹித் சர்மாவுக்கு பதிலாக ஹர்திக் பாண்டியா கொண்டுவரப்பட்டது அவரை இழிவு செய்யக்கூடியது இல்லை. மாறாக இதை ஒரு மாற்றமாக பார்க்க வேண்டும்.

இதையும் படிங்க : ரெய்னாவின் சிஎஸ்கே வரலாற்று சாதனை.. முறியடிக்க தோனிக்கு 180 ரன் தேவை.. இந்த சீசனில் நடக்குமா?

நான் ஆரம்பத்தில் கிரிக்கெட் வர்ணனைக்கு வந்த பொழுது செய்ய முடியுமா என்று நினைத்தேன். ஒரு உலகக் கோப்பையில் 10 நாட்கள் கிரிக்கெட் வர்ணனை செய்த பிறகு, மக்கள் அதை சித்துயிசம் என்றார்கள். நான் ஒரு தனிப்பாதையை உருவாக்கி அதில் போனேன். எனக்கு அந்த உலகக் கோப்பையில் மட்டும் கிரிக்கெட் வர்ணனை செய்வதற்கு 65 லட்சம் ரூபாய் கிடைத்தது. மேலும் ஆரம்பகட்ட ஐபிஎல் தொடரில் நான் கிரிக்கெட் வர்ணனை செய்த பொழுது ஒரு போட்டிக்கு 25 லட்ச ரூபாய் கிடைத்தது” என்று கூறி இருக்கிறார். அப்பொழுதே அவ்வளவு என்றால் இப்பொழுது எவ்வளவு கிடைக்கும் என்று யோசித்தால் கிரிக்கெட் வீரர்கள் அளவுக்கு கிடைக்கும் போல் தெரிகிறது.