நடப்பு ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 போட்டிகள் வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் கடந்த சிஎஸ்கே போட்டியில் விளையாடிய ஆர்சிபி வீரரான தென்னாபிரிக்காவை சேர்ந்த லுங்கி இங்கிடி தனது பெயர் காரணம் குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
சிஎஸ்கே போட்டியில் வாய்ப்பு
நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி மிகவும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இதுவரை விளையாடியுள்ள 11 போட்டிகளில் வெறும் 3 போட்டிகள் மட்டுமே தோல்வி அடைந்து புள்ளிகள் பட்டியலில் இரண்டாவது இடத்தில் இருக்கும் நிலையில் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறுவதற்கு சிறப்பான வாய்ப்பு அமைந்திருக்கிறது. இந்த சூழ்நிலையில் கடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் காயம் காரணமாக வேகப்பந்துவீச்சாளர் ஜாஸ் ஹேசில்வுட் விலக அவருக்கு பதிலாக லுங்கி இங்கிடி அணியில் சேர்க்கப்பட்டார்.
கடந்த சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிய அவர் நான்கு ஓவர்களில் 30 ரன்கள் மட்டும் விட்டுக் கொடுத்து 3 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றி பெங்களூர் அணி வெற்றி பெறுவதற்கு முக்கிய காரணமாக அமைந்தார். இந்த சூழ்நிலையில் லுங்கி இங்ககிடி என்பதற்கான அர்த்தம் குறித்தும் மற்றும் தனது பெயரில் இந்தியாவில் உடை இருப்பதையும் நன்கு அறிவேன் என சில கலகலப்பான விஷயங்களை பேசி இருக்கிறார்.
என் பெயரின் அர்த்தம் இதுதான்
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “வணக்கம் நண்பர்களே என் பெயர் லுங்கி நிகிடி. நான் அதை நெகிடி என நிறைய பேர் உச்சரிப்பதை கேள்விப்பட்டிருக்கிறேன். ஆனால் அது நிகிடி என தெளிவுபடுத்த விரும்புகிறேன். என் முழு பெயர் லுங்கிசானி. லுங்கி என்பது சரி செய்வதை குறிக்கும் மற்றும் சானி என்பது பூட்டைக் குறிக்கக் கூடிய ஒரு விஷயமாகும்.
இதையும் படிங்க:சுப்மான் கில் இல்லை.. ரிஸ்க் எடுத்தாதான் ஜெயிக்க முடியும்.. என்னோட அடுத்த டெஸ்ட் கேப்டன் நிச்சயமா இவர்தான் – அனில் கும்ப்ளே பேட்டி
ஆனால் அந்த இரண்டு பெயரையும் எதற்காக சேர்த்து எனக்கு வைத்தார்கள் என்று தெரியவில்லை. ஆனால் இதுதான் என்னுடைய பெயர். என் பெயரில் இந்தியாவில் உடை இருக்கிறது என்பதை நான் நன்றாக அறிவேன். மேலும் ஒரு நாள் எனக்கும் அந்த உடை கிடைக்கும் என்று எனக்கு நம்பிக்கை உள்ளது. என் முழு பெயர் பாதியாகப்பட்டு இப்போது அப்படித்தான் வந்திருக்கிறது. ஆனால் லுங்கி என்பது இங்கு வேறு மாதிரியான அர்த்தத்தை குறிக்கும்” என அவர் பேசியிருக்கிறார்.






