அண்ணன் தம்பி பாசம் எல்லாம் ஓகே.. ஆனா போட்டின்னு வந்தா ஒரு பாண்டியா டீம்தான் ஜெயிக்கணும் – ஆர்சிபி குருனால் பாண்டியா

0
207

ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் போட்டியில் நேற்று நடைபெற்ற 20 வது ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் மோதி விளையாடின.

இதில் வெற்றி பெற்ற விதம் குறித்து பெங்களூர் அணியின் குருனால் பாண்டியா சில முக்கியமான விஷயங்களை பேசி இருக்கிறார்.

- Advertisement -

இந்த போட்டியை பொருத்தவரை முதலில் பேட்டிங் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 221 ரன்கள் குவித்தது. அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரர் விராட் கோலி சிறப்பாக விளையாடி 42 பந்துகளை எதிர் கொண்டு 67 ரன்கள் குவித்தார். கேப்டன் ராஜத் பட்டித்தார் 32 பந்துகளில் 64 ரன்கள் குவித்தார். மும்பை இந்தியன்ஸ் அணியில் சிறப்பாக செயல்பட்ட ஹார்திக் பாண்டியா 2 விக்கெட் கைப்பற்றினார்.

அதற்கு பின்னர் வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய மும்பை அணிக்கு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் விரைவாக வெளியேறியதால், திலக் வர்மா மற்றும் ஹர்திக் பாண்டியா கூட்டணி ஆர்சிபிக்கு பயத்தை காட்டியது. 34 பந்துகளில் 89 ரன்கள் குவித்த இந்த கூட்டணி 29 பந்துகளில் 56 ரன்கள் குவித்த திலக் வர்மா புவனேஸ்வர் குமார் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார். அதற்குப் பின்னர் ஹர்திக் பாண்டியா ஹேசில் வுட் பந்து வீச்சில் வெளியேற, பின்னர் இறுதிக்கட்டத்தில் கடைசி ஓவரை வீசிய குருனால் பாண்டியா கடைசி ஓவரில் 4 விக்கெட் கைப்பற்றி ஆட்டத்தை பெங்களூர் அணியின் பக்கம் திருப்பினார். இதனால் மும்பை அணி 12 ரன் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

- Advertisement -

பெங்களூர் அணியின் வெற்றி குறித்து குருனால் பாண்டியா கூறும் போது “எனக்கும் பாண்டியாவுக்கும் உள்ள பந்தம் மிகப்பெரியது. இருப்பினும் இந்தப் போட்டியில் ஒரே ஒரு பாண்டியா அணி மட்டுமே வெற்றி பெற முடியும் என்பது எங்களுக்கு தெரியும். நாங்கள் ஒருவருக்கொருவர் வைத்திருக்கும் அன்பும், பாசமும் இயல்பானது ஹர்திக் பாண்டியா உண்மையிலேயே நன்றாக பேட்டிங் செய்தார். ஆனால் எங்கள் அணி வெற்றி பெற்றது மிகவும் சிறப்பானது. கடைசி ஓவரில் நான் பந்து வீச வந்த போது சான்ட்னர் இருந்தார். லெக் சைடு திசையில் பவுண்டரி அளவு குறைவாக இருந்தது.

இதையும் படிங்க:வெறும் 15 ரன்.. தோக்குறப்போ இந்த ஒரு விஷயம்தான் என் மனதில் ஓடியது.. மும்பை கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டி

நான் கடந்த 10 ஆண்டுகளாக இந்த மைதானத்தில் விளையாடி இருக்கிறேன். எனவே ஒரு கட்டத்தில் அந்த அனுபவம் எனக்கு மிகவும் உதவியது. அதனால்தான் அவருக்கு ஆப் சைடு திசையில் பந்தை வீசினேன். ஒரு பந்துவீச்சாளராக நீங்கள் மிகவும் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பீர்கள். 100% சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த நினைப்பீர்கள். மேலும் எங்கள் அணி வீரர்களும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். லக்னோ அணியில் ஆன்ட்டி ப்ளவர் உடன் ஏற்கனவே எனக்கு நல்ல அனுபவம் இருக்கிறது. எனவே அந்த பிணைப்பு இந்த தொடரை நன்றாக எடுத்துச் செல்ல உதவுகிறது” என்று பேசி இருக்கிறார்.

- Advertisement -