“ஆர்சிபி வீரருக்கு டி20 லீகில் விளையாட அனுமதி மறுப்பு”- கிரிக்கெட் வாரியம் அதிரடி !

0
593

உலகெங்கிலும் தற்போது கிரிக்கெட் சீசன் தொடங்கி மும்முறமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது ஐக்கிய அரபு அமீரகத்தில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகள் கடந்த வாரம் முடிவடைந்தன . மேலும் தென்னாப்பிரிக்காவிலும் புதியதாக அறிமுகப்படுத்தப்பட்ட எஸ்ஏ டி20 போட்டிகள் நிறைவடைந்துள்ளன . இந்நிலையில் தற்போது பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர் பாகிஸ்தான் நாட்டில் துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது . ஆறு அணிகள் பங்கேற்கும் இப்போட்டியில் பாகிஸ்தான் வீரர்கள் உட்பட சர்வதேச கிரிக்கெட் வீரர்களும் பங்கேற்று விளையாடி வருகின்றனர் .

ஐபிஎல் டி20 தொடர் அடுத்த மாத இறுதியில் இந்தியாவில் துவங்க இருக்கிறது . இனி வருகின்ற மே மாதம் வரை சர்வதேச கிரிக்கெட் ரசிகர்களுக்கு கொண்டாட்டமான நாள் தான். பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடர்களில் உலகின் பல்வேறு நாடுகளைச் சார்ந்த முன்னணி வீரர்கள் கலந்து கொண்டு விளையாடி வருகின்றனர். ரஷித் கான்,அலெக்ஸ் ஹேல்ஸ் ,டேவிட் மில்லர்,டேவிட் ,லியான் லிவிங்ஸ்டன்,ரில்லி ரூ ஷோ கைரன் பொல்லார்ட் ,பனுக்கா ராஜபக்ஷா மற்றும் ஷகிப் அல் ஹசன் போன்ற வீரர்கள் இந்த போட்டி தொடர்களில் பங்கேற்று விளையாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்நிலையில் இலங்கையைச் சார்ந்த இரண்டு வீரர்களுக்கு அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் பிஎஸ்எல் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடுவதற்கு என்ஓசி எனப்படும் கிளியரன்ஸ் சான்றிதழை வழங்க மறுத்து இருக்கிறது . இலங்கை அணியின் வீரர்களான குசால் மெண்டிஸ் மற்றும் ஆல் ரவுண்டர் வணிந்து ஹசரங்கா ஆகிய இரு வீரர்களுக்கும் என்ஓசி வழங்க மறுத்திருக்கிறது இலங்கை கிரிக்கெட் வாரியம் . குவெட்டா கிளாடியேட்டர் அணி ஹசரங்காவை ஒரு லட்சத்து 70 ஆயிரம் அமெரிக்க டாலர்களுக்கு பிளாட்டினம் கேட்டகிரியில் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது .

இந்நிலையில் அவருக்கு என்ஓசி மறுக்கப்பட்டு இருப்பதால் அவருக்கான மாற்று வீரரை தேடிக் கொண்டிருக்கிறது குவெட்டா கிளாடியேட்டர் அணி நிர்வாகம். மேலும் லாகூர் கலந்தர்ஸ் அணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இலங்கை அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குசால் மெண்டிஸ்க்கும் என்ஓசி மறுத்திருக்கிறது இலங்கை நிர்வாகம். இலங்கை அணி அடுத்த மாதம் நியூசிலாந்து சுற்றுப்பயணம் செய்து இரண்டு டெஸ்ட் டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடர்களில் ஆட இருக்கிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெறுவதற்கு நியூசிலாந்து அணியுடன் டெஸ்ட் போட்டி தொடர் முக்கியமானதாகும் . இதனை கருத்தில் கொண்டு இலங்கை வாரியம் டெஸ்ட் அணியில் இடம் பெறப்போகும் இரண்டு முக்கிய வீரர்களுக்கு என்ஓசி மறுத்துள்ளதாக இலங்கை கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

வனிந்து ஹசரங்கா ஐபிஎல் போட்டி தொடர்களில் ஆர்சிபி அணிக்காக ஆடி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆர்சிபி அணியின் முக்கிய வீரர் ஆன இவர் அந்த அணியால் தக்கவைக்கப்பட்டுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இங்கிலாந்தில் நடைபெற்ற தி 100 போட்டித் தொடருக்கும் ஹசரங்காவிற்கு என்ஓசி மறுக்கப்பட்டது.

- Advertisement -

எனினும் ஐபிஎல் போட்டிகளில் ஹசரங்கா நிச்சயமாக ஆடுவார் என்று எதிர்பார்க்கலாம் . சமீபத்தில் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற சர்வதேச டி20 போட்டிகளில் சிறப்பான பங்களிப்பை அளித்திருந்தார் ஹசரங்கா . எனினும் பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டிகளில் அவருக்கு என்ஓசி மறுக்கப்பட்டுள்ளதால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர் .