பெங்களூரு அணி தக்க வைக்கப் போகும் 4 வீரர்கள் இவர்கள் தான் – மேக்ஸ்வெல்லுக்கு இடம் இல்லை

0
307
Glenn Maxwell and Mike Hesson

இந்திய அணி டி20 உலகக் கோப்பை தொடரை முடித்து தற்போது நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் விளையாடி வருகிறது. டிசம்பர் மாதம் நெருங்கிவிட்டதால் ஐபிஎல் அணிகள் எல்லாம் தற்போது ஐபிஎல் ஏலத்துக்கு தயாராகி வருகின்றன. இந்த முறை மெகா ஏலம் இருக்கிறது என்பதால் ஒவ்வொரு அணியும் யாரை தக்க வைக்க வேண்டும் யாரை விடுவிக்க வேண்டும் என்பதில் மிகவும் கவனமுடன் செயல்பட்டு வருகின்றன. அதுவும் இந்த முறை 10 அணிகள் களம் இறங்க உள்ளதால் விடுவிக்கப்பட்ட வீரர்களை மீண்டும் ஏறத்தில் எடுப்பதற்கான வாய்ப்பு மிக மிகக் குறைவாகவே உள்ளது. அதனால் சரியான வீரர்களை தக்க வைத்து கோப்பை வெல்ல அனைத்து அணிகளும் முனைப்புடன் காணப்படுகின்றன.

ஐபிஎல் அணிகளில் மிக முக்கியமான அணிகளுள் ஒன்று பெங்களூரு அணி. இதுவரை நடந்த ஐபிஎல் தொடர்களில் ஒருமுறைகூட கோப்பையை கைப்பற்றா விட்டாலும் அந்த அணிக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கின்றனர். காரணம் அந்த அணிக்கு விளையாடும் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் விராட் கோலி. கடந்த ஐபிஎல் தொடருடன் கேப்டன் பதவியை விட்டு விலகி கொண்ட விராட் கோலி இந்த முறை டேட்டிங் வீரராக மட்டுமே களம் காண உள்ளார். ஏலத்தின் போது பல தவறுகளை இதற்கு முந்தைய தொடர்களை செய்த பெங்களூரு அணி இந்த முறை யாரை தக்க வைக்கப் போகிறார்கள் என்பதில் பல நாட்களுக்கு முன்பு இருந்தே ரசிகர்களுக்கு ஆர்வம் இருந்தது.

- Advertisement -

தற்போது அந்த அணி விராட் கோலி, டிவில்லியர்ஸ், சகால் மற்றும் படிக்கல் ஆகியோரை தக்க வைக்க போவதாக தகவல்கள் வருகின்றன. கடந்த முறை அந்த அணியின் பேட்டிங் தூணாக விளங்கிய ஆஸ்திரேலிய ஆல்ரவுண்டர் கிளன் மேக்ஸ்வெல் தக்க வைக்கப் போவதில்லை என்றும் கூறப்படுகிறது. அதுவும்போக கடந்த ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட் வீழ்த்திய ஹர்ஷல் பட்டேலையும் அந்த அணி தக்க வைக்கப் போவதில்லை. இளம் வீரரான தேவ்தூத் படிக்கல் கடந்த இரண்டு தொடர்களாக அந்த அணிக்கு சிறப்பாக செயல்பட்டு வருகிறார்.

மேலும் அந்த அணியின் சீனியர் வீரர் டிவில்லியர்ஸ் மற்றும் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான யுஸ்வேந்திர சஹாலையும் தக்க வைக்க பெங்களூரு அணி ஆர்வம் காட்டி வருகின்றது. ஏலத்தில் தேவையான வீரர்களை எடுத்து இந்த முறையாவது பெங்களூரு அணி கோப்பையை கைப்பற்றுமா என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.