தற்போது ஆர்சிபி அணிக்கு புதிய கேப்டனாக விராட் கோலியை நியமிக்காமல் ரஜத் பட்டிதாரை நியமித்தது ஏன் என்பது குறித்து அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் விளக்கம் அளித்திருக்கிறார்.
இன்று ஆர்சிபி அணி தங்களின் புதிய கேப்டனாக இளம் வீரர் ரஜத் பட்டிதாரை அறிவித்திருக்கிறது. புதிய கேப்டனாக விராட் கோலி மீண்டும் வருவார் என்று ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்த்து இருந்தார்கள். தற்போது இந்த அறிவிப்பால் அவர்கள் ஏமாற்றம் அடைந்திருக்கிறார்கள். இந்த நிலையில் அந்த அணி நிர்வாகம் இதற்கான விளக்கத்தை அளித்திருக்கிறது.
ரஜத் பட்டிதார் பயணம்
ரஜத் பட்டிதார் ஆரம்பத்தில் ஆர்சிபி அணிக்கு அடிப்படை விலையில் வாங்கப்பட்டார். பிறகு அவர் எந்த அணியாலும் ஐபிஎல் மெகா ஏலத்தில் வாங்கப்படாமல் போன சோக நிகழ்வு நடைபெற்றது. ஆர்சிபி அணி அவரை மீண்டும் அடிப்படை விலையில் கூட வாங்க விரும்பாதது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் அப்போது ஆர்சிபி அணியில் ஒரு இளம் வீரர் காயமடைய ரஜத் பட்டிதார் மீண்டும் அந்த அணிக்குள் நுழைந்தார். பிறகு அதே வருடம் ஐபிஎல் நாக் அவுட் சுற்றில் சதம் அடித்த முதல் வீரராக மாபெரும் சாதனையை படைத்தார். பிறகு இந்த வருடம் 14 கோடி ரூபாய்க்கு அந்த அணியால் தக்கவைக்கப்பட்டார். மேலும் தற்பொழுது கேப்டனாகவும் அறிவிக்கப்பட்டிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
விராட் கோலி கேப்டன் ஆகாதது ஏன்?
ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் கூறும் பொழுது “அணியின் புதிய கேப்டன் குறித்தான விராட் உடனான எங்களது விவாதத்தின் போது அவர் மிகவும் நேர்மையானவராக இருந்தார். அவர் முதிர்ச்சி அடைந்தவராக தன்னுடைய கருத்துக்களை வெளிப்படுத்தினார். வரவிருக்கும் சீசனுக்காக அவர் கொண்டிருக்கும் ஆர்வமும் உற்சாகமும் மிகப்பெரியது. கடந்த முறை சீசனை மாற்றி அமைத்ததில் அவருக்கு மிகப்பெரிய பங்கு இருக்கிறது. எனவே நாம் அவரைப் பற்றி நல்ல விஷயங்களை பேச வேண்டும்”
இதையும் படிங்க : சச்சின் விராட் கிட்ட பார்த்த அதை.. நேத்து கில் கிட்ட பார்த்தன்.. அவரோட பிளான் இதான் – மஞ்ச்ரேக்கர் பாராட்டு
“விராட் கோலி ரஜத் பட்டிதாரை ஒரு வீரராக மட்டும் இல்லாமல் ஒரு மனிதராகவும் மிகவும் விரும்புகிறார். அவருக்கு அவரை நிறைய பிடிக்கும். இந்த உறவு எங்களுக்கு நிச்சயம் உதவும். மேலும் கடந்த முறையும் ஆர்சிபி அணியின் கேப்டனை ஆதரித்தார். இந்த முறையும் அதையே அவர் செய்வார். மேலும் இயல்பாகவே அவர் ஒரு தலைவராக இருப்பதால் கேப்டன் ஒரு விஷயம் கிடையாது” என்று கூறி இருக்கிறார்.