சாதனை மகுடத்தில் மேலும் ஒரு சாதனை.. 11வது முறை.. 17 வருட ஐபிஎல் வரலாற்றில் முதல் வீரராக மாறிய விராட் கோலி

0
742

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் லீக் தொடரின் 46வது போட்டி தற்போது நடைபெற்று வருகிறது.

இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வீரர் விராட் கோலி சிறப்பான சாதனை ஒன்றைப் படைத்திருக்கிறார்.

- Advertisement -

டெல்லி பெங்களூரு மோதல்

ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடர் 46வது போட்டியில் டெல்லி மற்றும் பெங்களூர் அணிகள் களம் இறங்கி விளையாடி வருகின்றன. இதில் முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேப்பிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 162 ரன்கள் குவித்தது. நீண்ட காயத்திற்கு பிறகு பாப் டு பிளசிஸ் இந்த போட்டியில் களம் இறங்கினார். 26 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் 22 ரன்கள் குவித்து வெளியேற, மற்றொரு துவக்க வீரர் அபிஷேக் பொரேல் 11 பந்துகளில் 28 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.

அதற்குப் பிறகு இறுதிக் கட்டத்தில் ஸ்டெப்ஸ் 18 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 1 சிக்சர் என 34 ரன்கள் குவித்தார். டெல்லி அணியின் நட்சத்திர ஆட்டக்காரர் கேஎல் ராகுல் 41 ரன்கள் குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி களம் இறங்கியது. இம்முறை தொடக்க வீரர் பில் சால்ட்க்கு பதிலாக ஜேக்கப் பெத்தல் களம் இறங்கினார்.

- Advertisement -

விராட் கோலி படைத்த சாதனை

இதில் துவக்க வீரர் விராட் கோலி 36 பந்துகளை எதிர் கொண்டு 3 பவுண்டரிகளுடன் தற்போது 39 ரன்கள் குவித்து விளையாடி வருகிறார். இந்த சூழ்நிலையில் விராட் கோலி ஐபிஎல் வரலாற்றில் சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார். அதாவது இந்த சீசனில் விராட் கோலி 400க்கும் அதிகமான ரன்கள் குவித்து விளையாடி வரும் நிலையில் 11 ஐபிஎல் சீசன்களில் 400க்கும் அதிகமான ரன்கள் குவித்திருக்கும் முதல் வீரர் என்கிற சாதனையை விராட் கோலி படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:200+ ரன்ஸ்.. கேப்டனாக ஹர்திக் பாண்டியா அபாரம்.. சச்சின் டெண்டுல்கரின் ரெக்கார்டை உடைத்து மாஸ் சாதனை.. ஐபிஎல் 2025

2011ம் ஆண்டு 557 ரன்கள் குவித்த விராட் கோலி அதற்குப் பிறகு 13, 15, 16, 18, 19, 20, 21, 23, 24, 25 ஆகிய ஆண்டுகளில் 400க்கும் அதிகமான ரன்கள் விராட் கோலி குவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதில் 2016 ஆம் ஆண்டு ஒரே சீசனில் விராட் கோலி 973 ரன்கள் குவித்து இதுவரை அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் விராட் கோலி முதலிடத்தில் இருக்கிறார் என்றும் குறிப்பிடத்தக்கது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் தற்போது வரை பெங்களூரு அணி 15 ஓவர்கள் முடிவில் மூன்று விக்கெட் இழப்புக்கு 115 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.

- Advertisement -