சொந்த மண்ணில் ஹாட்ரிக் தோல்வி ஆனாலும் கவலை இல்லை.. என் கவனம் இப்போ இதுல மட்டுமே இருக்கு – ஆர்சிபி கேப்டன்

0
98

நடப்பு ஐபிஎல் தொடரில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் விளையாட உள்ளன.

சொந்த மண்ணில் விளையாடும் போட்டி குறித்து பெங்களூர் அணியின் கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பெங்களூர் ராஜஸ்தான் மோதல்

நடப்பு ஐபிஎல் தொடரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை எட்டு போட்டிகள் விளையாடி 5 போட்டிகளில் வெற்றி மற்றும் மூன்று போட்டிகளில் தோல்வி என புள்ளி பட்டியலில் நான்காவது இடத்தில் இருக்கிறது. இந்த சூழ்நிலையில் இன்று நடைபெற உள்ள ஆட்டத்தில் சின்னசாமி மைதானத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியை எதிர்கொண்டு விளையாட உள்ளது.

சொந்த மைதானத்தை விட்டு வெளியே நடைபெறும் போட்டிகளில் சிறப்பாக செயல்படும் பெங்களூர் அணி, சொந்த மைதானத்தில் நடைபெறும் போட்டிகளில் தோல்வியை சந்தித்து வருகிறது. இதுவரை சின்னசாமி மைதானத்தில் ஹாட்ரிக் தோல்வி அடைந்துள்ளது குறித்து ஆர்சிபி கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

பழைய விஷயத்தை பேசக்கூடாது

இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “எங்கள் சொந்த மைதான போட்டிகளில் நாங்கள் நல்ல கிரிக்கெட்டை விளையாடவில்லை. டாஸ் குறித்து நீங்கள் பேசுகிறீர்கள், டாஸ் வெற்றி பெறுவது என் கையில் இல்லை. எனவே இன்று நடைபெற உள்ள போட்டியில் ஆடுகளம் எப்படி இருக்கிறது என்று பார்க்கலாம். எதுவும் சாக்குப் போக்கு சொல்லி தப்பிக்க முடியாது. எனவே முடிந்த வரை எங்களால் சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த முயற்சி செய்வோம். டாசில் தோல்வி அடைந்தால் நீங்கள் பாதிப்போட்டியில் தோல்வி அடைந்து விடுவீர்கள் என்று அர்த்தம் அல்ல.

இதையும் படிங்க:பவர் ஹிட்டர்ஸ் வச்சு ஒரு பயனும் இல்ல.. எங்க பேட்டிங் வரிசையில் இதை செய்யக்கூடிய ஆள் இல்லை – கம்மின்ஸ் வருத்தம்

நீங்கள் முதலில் பேட்டிங் செய்தாலும் உங்களால் முடிந்த வரை சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டியது மிகவும் அவசியமானதாகும். மேலும் நாங்கள் கடந்த காலத்தில் நடந்தது பற்றி பேசுவதில்லை. ஏனென்றால் இது ஒரு நீண்ட நெடிய தொடர் என்பதால் தோல்வியடைந்தால் அது பற்றி பெரிதாக பேசாமல் அடுத்த போட்டியில் எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து மட்டுமே சிந்திக்க வேண்டும். எனவே முடிந்தவரை நிகழ்காலத்தில் இருந்து எப்படி வெற்றி பெறுவது என்பது குறித்து யோசிக்க வேண்டும்” என்று அவர் பேசி இருக்கிறார்.

- Advertisement -