நாங்க இப்ப தோத்துட்டா என்ன?.. போட்டிக்கு நடுவுல எனக்கு இருந்த ஒரே குழப்பம் இது மட்டும்தான் – ரஜத் படிதார் பேச்சு

0
51
Rajat

நேற்று மழையால் பாதிக்கப்பட்ட லக்னோ சூப்பர் ஜெயின்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ஆர்சிபி அணி 9 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்த தோல்வி குறித்து கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.

இந்த போட்டி 19 ஓவர் கொண்டதாக நடத்தப்பட்டது. முதலில் பேட்டிங் செய்த லக்னோ மணிக்கு தொடக்க ஆட்டக்காரர் மிட்சல் மார்ஸ் 55 பந்தில் 111 ரன்கள் எடுத்தார். அந்த அணி 209 ரன்கள் எடுத்தது. இலக்கு 213 ரன்கள் என்று நிர்ணயிக்கப்பட்டது. தொடர்ந்து விளையாடிய ஆர்சிபி அணி 203 ரன்கள் மட்டுமே எடுத்தது. லக்னோ 9 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இன்னும் போட்டிகள் உள்ளது

இந்த தோல்வி குறித்து பேசி உள்ள ரஜத் படிதார் “நாம் இலக்கை எப்படி அடைவது என்பதில் தெளிவாகவே இருந்தோம். பையன்கள் நன்றாகவே விளையாடினார்கள். மேலும் இந்த போட்டியை கடைசி வரை சிறப்பாகவே கொண்டு சென்றோம். இன்னும் ஒன்று அல்லது இரண்டு ஷாட் இருந்திருந்தால் போட்டியை வெற்றி பெற்று இருப்போம். இந்த ஆடுகளத்தில் பேட்டிங் செய்வது எளிதாக இருந்தது”

“போட்டி முடிந்த உடனேயே தோல்விக்கான காரணங்கள் எல்லாவற்றையும் பகுப்பாய்வு செய்வது மிகவும் கடினமானது. இதற்கு இன்னும் கொஞ்சம் நேரம் தேவை. எங்களுக்கு நான்கு போட்டிகள் இருக்கின்றன. ஒவ்வொரு போட்டியாக எடுத்துக் கொண்டு செல்ல வேண்டும்”

- Advertisement -

இந்த இடத்தில் குழம்பிவிட்டேன்

“மார்ஸ் மிகவும் அழகாக விளையாடினார் பவர் பேரில் அவர் எங்களை அழுத்தத்தில் வைத்திருந்தார். பவர் பிளே முடிவடைந்ததும் அவருக்கு எதிராக யாரை பதிவு வைப்பது என்று நான் குழம்பிப் போனேன். அவர் விளையாடிய விதம் மிகவும் சிறப்பானது”

இதையும் படிங்க : விராட் கோலியிடமே அறிவுரை வாங்கி.. அவரையே போல்ட் ஆக்கி வெளியேற்றினேன் – லக்னோ பவுலர் சுவாரஸ்ய தகவல்

“நாங்கள் விளையாடிய விதத்தில் நல்ல இன்டெண்ட் இருந்தது. அனைத்து பேட்ஸ்மேன்களும் அதை காட்டினார்கள். அனைவரும் நல்ல மனநிலையுடன் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -