இன்று ஐபிஎல் தொடரின் பைனலில் பஞ்சாப் அணிக்கு எதிராக ஆர்சிபி அணி ஆறு ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முதல் முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இந்த கோப்பையை வென்றது குறித்து ஆர்சிபி கேப்டன் ரஜத் பட்டிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணிக்கு மிக அதிகபட்சமாக விராட் கோலி 35 பந்தில் 43 ரன்கள் எடுத்தார். அந்த அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 190 ரன் எடுத்தது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்த இலக்கை எட்ட முடியும் என்பதால் ஆர்சிபி அணிக்கு நம்பிக்கை குறைவாக காணப்பட்டது.
அசத்திய ஆர்சிபி
இதைத்தொடர்ந்து பந்து வீச்சில் மிகச் சிறப்பாக செயல்பட்ட ஆர்சிபி தேவைப்பட்ட இடைவெளிகளில் சரியாக விக்கெட் வீழ்த்தி பஞ்சாப் அணிக்கு பெரிய நெருக்கடியை கொடுத்தது. கடைசி இரண்டு ஓவர்களில் 41 ரன்கள் தேவை என்ற நிலையில் 6 ரன்கள் வித்தியாசத்தில் ஆர்சிபி அணி வெற்றி பெற்று முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.
ஐபிஎல் தொடரில் 18 ஆவது ஆண்டில் முதல்முறையாக ஆர்சிபி அணிக்கு கேப்டனாக வந்த ரஜத் பட்டிதார் தன்னுடைய முதல் கேப்டன்சி தொடரிலேயே கோப்பையை வென்று ஆர்சிபி அணிக்கும் ரசிகர்களுக்கும் பெரிய மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறார். ஆர்சிபி வரலாற்றில் இவருக்கு தனி இடம் உருவாகி இருக்கிறது.
விராட் கோலி தகுதியானவர்
இந்த வெற்றி குறித்து பேசி இருக்கும் ரஜப் பட்டிதார் கூறும் பொழுது “இது மிகவும் சிறப்பானது என்று நினைக்கிறேன். இந்த அணிக்காக நீண்ட காலம் விளையாடி வரும் விராட் கோலிக்கும் இந்த அணியை நீண்ட காலம் ஆதரித்து வரும் ரசிகர்களுக்கும் மிகவும் சிறப்பானது. இதற்கு இவர்கள் தகுதியானவர்கள். முதல் தகுதி சுற்றில் நாங்கள் வெற்றி பெற்றதுமே கோப்பையை வெல்ல முடியும் என்று நான் நம்பினேன். இந்த மைதானத்தில் 190 ரன்கள் நல்ல ரன்கள்தான். ஏனென்றால் ஆடுகளம் கொஞ்சம் மெதுவாக இருந்தது”
“எங்கள் பந்துவீச்சாளர்கள் திட்டங்களை செயல்படுத்திய விதத்தை பார்க்கும் பொழுது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது. நான் அழுத்தம் ஏற்படும்போதெல்லாம் க்ருனால் பாண்டியாவை பந்து வீச அழைக்கிறேன். அதேபோல சுயாஸ் ஷர்மாவும் தொடர்ந்து எங்களுக்கு சிறப்பாக இருந்தார். மேலும் அனைத்து வேகப்பந்துவீச்சாளர்களும் சிறப்பாக இருந்தார்கள். குறிப்பாக ரொமாரியோ ஷெப்பர்ட் அவருடைய மூன்று ஓவரில் நல்ல திருப்பு முனைகளை கொடுத்தார்”
இதையும் படிங்க : இன்னைக்கு நைட் ஒரு குழந்தை மாதிரி தூங்குவேன்.. கப் வாங்க டிவிலியர்ஸ் வரணும் – விராட் கோலி பேட்டி
“இது விராட் கோலியை கேப்டனாக வழி நடத்துவதற்கு கிடைத்த மிக அருமையான வாய்ப்பு. எனக்கு இது மிகவும் கற்றுக்கொள்ளும் வாய்ப்பாகவும் இருந்தது. முன்பே சொன்னது போல அவர் எல்லாவற்றுக்கும் தகுதியானவர். விராட் கோலி மற்றும் ரசிகர்கள் மேலும் அணி ஊழியர்கள், அணி நிர்வாகம் என அனைவரும் ஆதரித்த விதம் அழகாக இருந்தது. ரசிகர்களுக்கு ஒரு வரி சொல்கிறேன் ஈ சாலா கப் நம்தே” என்று கூறியிருக்கிறார்.






