நேற்று ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு எதிரான போட்டியை ஆர்சிபி அணி 43 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த போட்டி குறித்து ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் படிதார் பேசியிருக்கிறார்.
இந்த போட்டிகள் முதலில் பேட்டிங் செய்த ஆர்சிபி அணி மூன்று விக்கெட் இழப்புக்கு 250 ரன்கள் குவித்தது. தொடர்ந்து விளையாடிய சிஎஸ்கே அணி 207 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. டேவிட் 25 பந்தில் 70 ரன்கள் குவித்து மிரட்டினார்.
இதுகுறித்து ரஜத் படிதார் பேசும் பொழுது “இந்த வெற்றி மிகவும் சந்தோஷமாக இருக்கிறது. நல்ல கிரிக்கெட் விளையாடி வெற்றி பெற்றால் அது எல்லா வீரர்களுக்கும் திருப்தியை கொடுக்கும். இந்த ஆடுகளம் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாக இருந்தது. அந்த நேரத்தில் விராட் கோலி மற்றும் பில் சால்ட் இருவரும் விளையாடிய விதம் அருமையாக இருந்தது”
“பிறகு டேவிட் விளையாடிய விதம் ஆச்சரியமானது. அவர் அடித்த சிக்ஸர்களை எல்லா பக்கமும் நான் கிரவுண்டில் இருந்து வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தேன். நான் 13 வது ஓவரில் உள்ளே வந்ததும் என் மனநிலை மிகத் தெளிவாக இருந்தது. நான் பந்துவீச்சாளர்களுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தேன். என்னுடன் டேவிட் இருந்தது அதிர்ஷ்டமான விஷயம்”
“தற்போது உலகில் சிறந்த ஃபினிஷர் டேவிட்தான். அவர் தொடர்ந்து நிலைத்தன்மையுடன் அதிரடியாக போட்டிகளை பினிஷ் செய்து வருகிறார். நான் பார்த்ததில் சிறந்த ஃபினிஷர் என்று அவரை சொல்லலாம். அவர் அடித்த சிக்சர் 106 மீட்டரா? நான் பந்தை மட்டும்தான் பார்த்துக் கொண்டிருந்தேன்”
இதையும் படிங்க : யாராவது சோகமான பாட்டு எனக்கு சொல்றீங்களா.? சிஎஸ்கேவை பார்த்தாலே மோசமா இருக்கு – அஸ்வின் வேதனை
“இந்த போட்டியில் எல்லா பவுலர்களும் சிறப்பான பங்களிப்பை கொடுத்தார்கள். சிறப்பாக விளையாடிய சர்பராஸ் கானை க்ருனால் பாண்டியா வெளியேற்றினார். ஆட்டத்தில் எங்காவது எனக்கு பிரச்சனை ஏற்பட்டால் நான் உடனடியாக அவரைத்தான் பந்து வீச அழைப்பேன். ஒட்டுமொத்தமாக இது அணியின் வெற்றியாக அமைந்தது” என்று கூறி இருக்கிறார்.