நாங்க பேட்டிங் செஞ்சப்போ எங்களுக்கு இருந்த பிரச்சனை.. ஆர்சிபி அணிக்கு இல்லை.. அதான் ஈசியா ஜெயிச்சுட்டாங்க – சஞ்சு சாம்சன் பேட்டி

0
130

தற்போது நடைபெற்று முடிந்த ராஜஸ்தான் ராயல்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் டி20 கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.

இந்த சூழ்நிலையில் தோல்விக்கான காரணம் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.

- Advertisement -

ஒன்பது விக்கெட்டில் பெங்களூர் வெற்றி

ராஜஸ்தானில் நடைபெற்ற இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ராஜஸ்தான் அணி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்புக்கு 173 ரன்கள் குவித்தது. அந்த அணியில் தொடக்க ஆட்டக்காரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் அதிகபட்சமாக 47 பந்துகளில் 10 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் என 75 ரன்கள் குவித்தார். கேப்டன் சஞ்சு சாம்சன் 19 பந்துகளில் 15 ரன்கள் மட்டுமே எடுத்து தடுமாற்றமான முறையில் ஆட்டம் இழந்து வெளியேறினார்.

அதற்குப் பிறகு வெற்றி இலக்கை நோக்கி களம் இறங்கிய பெங்களூர் அந்நிய ராஜஸ்தான் அணியின் பந்துவீச்சை மிகவும் எளிதாக எதிர்கொண்டு சிறப்பாக விளையாடியது. பில் சால்ட் மற்றும் விராட் கோலி ஜோடி முதல் விக்கெட்டுக்கு 8.4 ஓவரில் 92 ரன்கள் குவித்தது. பில் சால்ட் 33 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 65 ரன்கள் குவித்து வெளியேற, மறுமுனையில் விராட் கோலி கடைசி வரை ஆட்டம் இழக்காமல் விளையாடி 45 பந்துகளில் 62 ரன்கள் குவித்தார். இவரோடு ஜோடி சேர்ந்த தேவ்தத் படிக்கல் 28 பந்துகளில் 40 ரன்கள் குவித்தார். இதன் மூலமாக ஒன்பது விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பெங்களூர் அணி வெற்றி பெற்றது.

- Advertisement -

தோல்விக்கான காரணம் குறித்து சாம்சன்

இந்த தோல்வி குறித்து ராஜஸ்தான் கேப்டன் சஞ்சு சாம்சன் கூறும்போது “170 ரன்கள் எளிதான ஸ்கோரா என்று கேட்கிறீர்கள். நான் நிச்சயமாக ஆம் என்று கூறுவேன். டாஸ் இழந்த பிறகு அதுவும் இது போன்ற மெதுவான விக்கெட்டில் முதல் 10 ஓவர்களுக்கு வெயிலில் முதலில் பேட்டிங் செய்வது பகல் நேர ஆட்டங்களில் மிகவும் கடினம் என்று நினைக்கிறேன். அவர்கள் எங்களை ஏற்கனவே கடுமையாக தாக்குவார்கள் என்று தெரியும். பவர் பிளேயிலேயே அவர்கள் ஆட்டத்தை எங்களிடம் இருந்து எடுத்து விட்டார்கள். கேட்ச்சுகள் தான் பெரும்பாலும் போட்டிகளை வெல்லக் கூடியதாக இருக்கும்.

இதையும் படிங்க:17.3 ஓவரில் 175 ரன்.. டி20 வரலாற்றில் முதல் ஆசிய வீரர்.. விராட் கோலி படைத்த மெகா சாதனை.. 9 விக்கெட்டில் ராஜஸ்தானை வீழ்த்தி வெற்றி

முதலில் அவர்கள் எங்களது கேட்ச் வாய்ப்புகளை விட்டார்கள். அதற்குப் பிறகு நாங்கள் அவர்களின் கேட்ச் வாய்ப்புகளை விட்டோம். சந்தேகத்திற்கு இடமின்றி நாங்கள் இந்த விஷயத்தில் முன்னேற வேண்டும். ஆர்சிபி அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் பந்து நன்றாக முன்னேறி வந்தது. முன்னேற்றம் மற்றும் வலுவாக எப்படி மீண்டு வருவது என்று நாங்கள் சில உரையாடல்களை மேற்கொண்டு இருக்கிறோம். எனவே நடந்தவற்றை களைந்து அடுத்த போட்டியில் எப்படி சிறப்பாக செயல்பட வேண்டும் என்பதில் மட்டுமே கவனம் செலுத்த போகிறோம்” என்று சாம்சன் கூறியிருக்கிறார்.

- Advertisement -