சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2025 கிரிக்கட் லீக் தொடரின் எட்டாவது ஆட்டத்தில் பெங்களூர் அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி வெற்றி பெற்றதற்கான காரணம் குறித்து அதன் கேப்டன் ராஜத் பட்டிதார் சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
ஆர்சிபி அணி வெற்றி
இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெங்களூர் அணி 20 ஓவர்கள் முடிவில் ஏழு விக்கெட் இழப்புக்கு 196 ரன்கள் குவித்தது. அந்த அணியில் கேப்டன் ராஜத் பட்டிதார் மூன்றாவது வரிசையில் களம் இறங்கி சென்னை அணியின் சுழற் பந்துவீச்சை அடித்து நொறுக்கினார். 32 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு 4 பவுண்டரி மற்றும் 3 சிக்ஸ் என 51 ரன்கள் குவித்து ஆட்டம் இழந்தார்.
அதற்குப் பிறகு களம் இறங்கிய சென்னை அணிக்கு இரண்டாவது பாதியில் ஆடுகளம் பந்து வீச்சுக்கு உதவியதால் இதனை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பெங்களூரு வீரர்கள் சென்னை அணியை சிக்கலில் தள்ளினார்கள். சென்னை அணியை பொறுத்த வரை அதன் தொடக்க ஆட்டக்காரர் ரச்சின் ரவீந்தரா 31 பந்துகளை எதிர்கொண்டு 41 ரன்கள் எடுத்தார். இறுதிக்கட்டத்தில் எம்எஸ் தோனி அதிரடியாக விளையாடி 16 பந்துகளில் 30 ரன்கள் எடுத்தார்.
வெற்றிக்கான காரணம் குறித்து பட்டிதார்
இந்த சூழ்நிலையில் ஆர்சிபி கேப்டன் பேசும்போது ” இந்த போட்டியில் எங்களுக்கு நல்ல ஸ்கோர் கிடைத்தது. மேலும் ஆடுகளம் மெதுவாக இருந்ததால் அது பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக இல்லை. இந்த ஆடுகளத்தில் ரசிகர்கள் இருப்பதால் சென்னை சேப்பாக்கத்தில் விளையாடுவது எப்போதுமே சிறப்பான தருணம் ஆகும். சேப்பாக்கம் மட்டுமல்ல ஒவ்வொரு சொந்த அணியும் தங்களது சொந்த மைதானத்தில் விளையாடுவது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கும். சேஸ் செய்வது எளிதானது அல்ல என்பதை நாங்கள் அறிந்திருந்ததால் 200 ரன்கள் இலக்காக வைக்க வேண்டும் என்று நிர்ணயத்தோம்.
இதையும் படிங்க:3 உலக தரமான பவுலர்கள் இருக்கும் போது.. இந்த பிரச்சனைதான் வரும்.. இங்குதான் கோட்டை விட்டோம் – சிஎஸ்கே கேப்டன்
நான் இருக்கும் வரை ஒவ்வொரு பந்தையும் அடித்து ஆட முயற்சி செய்வேன் என்பதுதான் எனது திட்டம் மற்றும் முறை குறிக்கோளாக இருந்தது. நாங்கள் பேட்டிங் வரிசையை மாற்றவில்லை கடந்த ஆட்டத்தைப் போலவே இருந்தது இந்த ஆடுகளம் சுழற் பந்து வீச்சுக்கு சாதகமாக இருந்தது. நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே சுழற் பந்துவீச்சாளர்களை பயன்படுத்த விரும்பினோம். லிவிங்ஸ்டன் இந்த போட்டியில் சிறப்பாக செயல்பட்டார். மேலும் ஹாசில்வுட் தொடக்க ஓவர்கள் வீசியது அற்புதமாக இருந்தது. தொடக்கத்திலேயே மூன்று விக்கெட்டுகள் வீழ்த்தியது எங்கள் வெற்றிக்கு முக்கிய காரணம் மற்றும் எங்கள் பந்துவீச்சாளர்கள் தொடர்ந்து ஒரே லெந்தில் வீசியது நெருக்கடியை ஏற்படுத்தினார்கள்” அவர் கூறியிருக்கிறார்.






