ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரின் மீதமுள்ள போட்டிகள் வருகிற சனிக்கிழமை முதல் நடைபெற உள்ளது. இதில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி வலுவான இடத்தில் இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்றது குறித்து ராஜத் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
பெங்களூர் அணியின் புதிய கேப்டன்
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணி இதுவரை பல கேப்டன்களை பார்த்திருக்கிறது. இதில் அதிக முறை விராட் கோலி கேப்டன் ஆக இருந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃபாப் டு பிளசிஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருந்தார். அதற்குப் பிறகு நடைபெற்ற மெகா ஏலத்தில் அவரை கழட்டிவிட்ட பெங்களூர் நிர்வாகம் அவருக்கு பதிலாக ராஜத் பட்டிதாரை கேப்டனாக நியமித்தது.
பட்டிதார் பெங்களூர் அணி கண்டடுத்த சிறப்பான இளம் வீரர் ஆவார். சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தும் நிலையில் இவரது திறமையை நம்பி அடுத்த மூன்று வருடங்களுக்கு கேப்டனாக நியமித்தது. இந்த சூழ்நிலையில் கேப்டன் பொறுப்பை ஏற்பதற்கு முன்பாக தனது மனநிலை குறித்தும் ஆர்சிபி அணியின் முக்கிய வீரரான விராட் கோலி குறித்தும் பட்டிதார் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அப்போது எதுவும் தோன்றவில்லை
இதுகுறித்து அவர் விரிவாக கூறும்போது “விராட் கோலி பெங்களூர் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்பதை உறுதிப்படுத்தும் வகையில் ஒரு வகையான தகட்டை பிடிக்கச் சொன்னபோது, என் மனதில் இது குறித்தும் அப்போது தோன்றவில்லை வெறுமையாக உணர்ந்தேன். அதை விராட் கோலி என்னிடம் கொடுக்கும் போது, ‘கேப்டன் பதவிக்கு நீ தகுதியானவன் அந்த தகுதியை நீ தான் சம்பாதித்தாய்’ என்று கூறினார். அப்போது அவர் கூறிய பிறகு தான் நான் சாதாரண மன நிலைக்கு வந்தேன்.
இதையும் படிங்க:அந்த 4 பேர் போனதுக்கே பயப்படாத இந்திய அணி.. விராட் ரோஹித் போனா கவலைப்படாது – சஞ்சய் மஞ்சுரேக்கர்
விராட் கோலி வலைகளில் பேட்டிங் செய்யும்போது எல்லாம் அவரது பேட்டிங்கை நான் பார்க்கிறேன். முடிந்தவரை அவரிடம் இருந்து விஷயங்களை கற்றுக் கொள்கிறேன். இது எனக்கு ஒரு நல்ல வாய்ப்பாக உள்ளது. மேலும் கேப்டன் பதவியும் என்னிடம் இருக்கிறது. மேலும் விராட் கோலி என்னோடு இருக்கிறார். முடிந்தவரை அவரிடம் இருந்து அனைத்து விஷயங்களையும் கற்றுக் கொள்ள முயற்சிப்பேன். அவருக்கு இருக்கும் அனுபவம் மற்றும் யோசனைகளின் அளவு வேறு யாருக்கும் இருப்பதாக தோன்றவில்லை” என அவர் பேசியிருக்கிறார்