இந்திய கிரிக்கெட் அணியில் ரோகித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இருவரும் ஒரே நேரத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு அறிவித்திருப்பது இந்திய ரசிகர்களிடையே கவலை அடைய வைத்திருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய அணையின் முன்னாள் கிரிக்கெட் வீரர் சஞ்சய் மஞ்ச்ரேக்கர் இந்த இருவர் குறித்தும் இந்திய அணியின் நிலை குறித்தும் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
விராட் ரோஹித் ஓய்வு
டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்திய அணியின் கேப்டனாக இருந்த ரோகித் சர்மா ஓய்வு பெறுவதாக அறிவித்தார். அதற்குப் பிறகு விராட் கோலி ஓய்வை அறிவிப்பதாக தகவல்கள் வெளியான நிலையில் அவரது முடிவை மறுபரிசீலனை செய்யுமாறு பிசிசிஐ அவரிடம் வேண்டுகோள் விடுத்தது. ஆனால் தனது முடிவில் உறுதியாக இருந்த விராட் கோலி கடந்த சில தினங்களுக்கு முன்பாக அவரும் டெஸ்ட் ஃபார்மேட்டில் இருந்து ஓய்வை அறிவித்திருக்கிறார்.
இந்த செய்தி இந்திய ரசிகர்களிடையே மிகப்பெரிய வருத்தத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனென்றால் ஒரே நேரத்தில் இரண்டு பெரிய சீனியர் வீரர்கள் ஓய்வு பெற்றிருப்பது இந்திய அணிக்கு நிச்சயம் மிகப்பெரிய பிரச்சினையாக இருக்கும் என்பதில் எந்த விதமான சந்தேகமும் இல்லை. அனுபவமே இல்லாத ஒரு இளம் அணி இங்கிலாந்து போன்ற பெரிய அணிக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் சுற்றுப்பயணம் செய்து ஐந்து டெஸ்ட் போட்டியில் விளையாடுவது சாதாரண விஷயம் கிடையாது. இந்த சூழ்நிலையில் இந்திய அணி குறித்து கவலை கொள்ள வேண்டாம் என அதற்கான காரணம் குறித்து சஞ்சய் மஞ்சுரேக்கர் சில முக்கிய விஷயங்கள் பேசி இருக்கிறார்.
அப்பவும் இதே நிலைதான்
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது “சில ரசிகர்கள் இது குறித்து கவலைப்படுவார்கள் என்று தெரியும். ஆனால் இந்திய கிரிக்கெட்டில் ஒரே நேரத்தில் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், லட்சுமண் மற்றும் கங்குலி ஆகியோர் வெளியேறிய போது ஒரு பீதி ஏற்பட்டது. ஆனால் அதற்குப் பிறகு இந்திய அணியில் என்ன நடந்தது என்பதை மட்டும் நினைவில் கொள்க. அதற்குப் பின் இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் நம்பர் 1 இடத்திற்கு முன்னேறியது.
இதையும் படிங்க:அடுத்த டெஸ்ட் கேப்டன்.. இவர் பேர் கட்டாயம் இருக்கணும்.. ஆனா அவர் கேப்டன் ஆகலனா ஏமாற்றம் – அஸ்வின் பேட்டி
எனவே இப்போது விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா இருவரும் விலகிய நிலையில் இந்திய அணியும் மீண்டும் பழைய நிலைக்கு திரும்ப சிறிது காலம் எடுக்கும். அதற்குப் பின்னர் இந்திய அணியின் பந்துவீச்சு தரம் மேம்பட்டது. எனவே இப்போதும் இந்திய அணி புதிய பந்துவீச்சாளர்களையும் புதிய வீரர்களையும் நிச்சயமாக கண்டுபிடிக்கும். மேலும் இந்திய அணி உலகின் சிறந்த அணிகளில் ஒன்றாக தொடரும்” என அவர் நம்பிக்கை தெரிவித்து இருக்கிறார்.