சமூக வலைத் தளங்களில் கேலிக்கு உள்ளாகும் பெங்களூர் அணியின் அப்பீல்

0
130
Faf du Plessis Worst Review vs KKR

2022 ஐ.பி.எல்-ன் 15-வது சீசனின் ஐந்தாவது நாளின் ஆறாவது ஆட்டம், பெங்களூர் கொல்கத்தா அணிகளுக்கு இடையே, பனிப்பொழிவு ஆட்டத்தின் முடிவுகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும், நவி மும்பையின் டி.ஒய். பாட்டில் மைதானத்தில் நடந்து வருகிறது.

முதலில் டாஸ் வென்ற பெங்களூர் அணியின் கேப்டன் பாஃப் டூ பிளிசிஸ் கொல்கத்தா அணியை பேட் செய்ய அழைத்தார். இதன்படி கொல்கத்தா அணியின் துவக்க ஆட்டக்காரர்களாக வெங்கடேஷ்-ரகானே களமிறங்கினார்கள். ஆட்டத்தின் முதல் மூன்று ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 14 ரன்களென கொல்கத்தா சரிசமமாக ஆட்டத்திற்குள்தான் இருந்தது.

- Advertisement -

ஆனால் நான்காவது ஓவரிலிருந்து ஏழாவது ஓவர் வரை, தொடர்ந்து ஓவர்களுக்கு ஒரு விக்கெட் என நான்கு முக்கிய விக்கெட்டுகளை இழந்து சிக்கலில் மாட்டிக்கொண்டது. ஆனாலும் கொல்கத்தா அணியின் தலைமைப் பயிற்சியாளர் மெக்கல்லமின் தாக்குதல் பாணி யுக்தியின்படி, ஆட வந்த அனைத்து வீரர்களும் அடிக்கவே போக, ஓவர்களும், தேவையான ரன்களும் இருந்தாலும் விக்கெட்டுகள் சரிந்துவிட்டது.

ஆகாஷ் தீப், ஹசரங்கா, ஹர்சல் என வரிசையாய் விக்கெட்டுகளை வீழ்த்த 101 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது கொல்கத்தா அணி. இந்த நிலையில் ஆட்டத்தில் நடந்த சம்பவமொன்று சமூக வலைத்தளங்களில் நகைச்சுவைக்கு உள்ளாகி வருகிறது.

என்னவென்றால், 16-வது ஓவரின் கடைசி பந்தை, வருண் சக்ரவர்த்தியின் கால்களுக்கு இடையில், பிலாக்-ஹோலில் ஹர்சல் வீச, அதை வருண் சக்ரவர்த்தி பேட்டை வைத்து எளிதாய் தடுத்துவிட்டது தொலைக்காட்சியில் பார்த்தவர்களுக்கும் தெரிந்தது. ஆனால் கேப்டன் பாஃப்பை சகவீரர்கள் வலியுறுத்தி அப்பீல் செய்ய வைத்து, இப்பொழுது சமூக வலைத்தளங்களில் அது நகைச்சுவைக்கு உள்ளாகி இருக்கிறது!

- Advertisement -