இன்று ஐபிஎல் மினி ஏலத்தில் ஆர்சிபி பதினாறு கோடி ரூபாய் லாபத்தில் ஒரு முக்கிய இந்திய வீரரை வாங்கி அசத்தியிருக்கிறது.
தற்போது அபுதாபியில் 19வது ஐபிஎல் சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் பரபரப்பாக நடைபெற்று கொண்டு இருக்கிறது. இந்த ஏலத்தில் யாரும் எதிர்பார்க்காத சம்பவங்கள் நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது.
வேற லெவல் மும்பை இந்தியன்ஸ்
தற்போதைய மும்பை இந்தியன்ஸ் கையில் வெறும் 2.60 கோடி உடன் மிகக் குறைந்த பணம் வைத்திருக்கும் அணியாக ஏலத்திற்குள் வந்தது. உடனடியாக கேமரூன் கிரீனை வாங்குவதற்கு கையை உயர்த்தி எல்லோரையும் ஆச்சரியத்தில் தள்ளியது. இதைத்தொடர்ந்து இன்னொரு காரியத்தையும் செய்தது.
இந்த நிலையில் அடிப்படை விலையாக ஒரு கோடி ரூபாய் உடன் குயிண்டன் டி காக் ஏலத்திற்கு வந்தார். கொஞ்சமும் யோசிக்காமல் மும்பை இந்தியன்ஸ் அணி கையை உயர்த்தியது. ஆனால் எந்த அணியும் அவருக்காக ஏலத்தில் மோதவில்லை. இதனால் மும்பை இந்தியன்ஸ் வெறும் ஒரு கோடி ரூபாய்க்கு நல்ல ஃபார்மில் இருக்கும் குயிண்டன் டி காக்கை வாங்கியது.
பதினாறு கோடி ரூபாய் லாபம்
இந்த நிலையில் இந்த ஏலத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வெங்கடேஷ் ஐயர் வந்தார். யாரும் எதிர்பாராத விதமாக அவருக்கு கைகளை உயர்த்தவில்லை. இந்த நிலையில் லக்னோ அணி முதல் ஏலத்தை ஆரம்பித்தது. இதைத் தொடர்ந்து ஆர்சிபி அணி களத்தில் குதித்தது. ஆனால் உடனடியாக லக்னோ வெளியேறிவிட்டது.
இதையும் படிங்க : 25.20 கோடி.. ஐபிஎல் சாதனையை தடுத்து நிறுத்திய சிஎஸ்கே.. மும்பை செய்த சுவாரசிய சம்பவம் – ஐபிஎல் மினி ஏலம்
இதைத்தொடர்ந்து சம்பிரதாயமாக உள்ளே வந்த கொல்கத்தா பெரிய அளவில் முயற்சி செய்யவில்லை. இதனால் வெங்கடேஷ் ஐயர் ஆர்சிபி அணிக்கு வெறும் ஏழு கோடி ரூபாய்க்கு கிடைத்தார். 15 முதல் 20 கோடி ரூபாய்க்கு செல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இது ஆச்சரியத்தை உண்டாக்கியது. அதே சமயத்தில் கடந்த மெகா ஏலத்தில் ஆர்சிபி இவருக்கு 23 கோடி ரூபாய்க்கு சென்றது. ஆனால் தற்போது மினி ஏலத்தில் அதைவிட 16 கோடி ரூபாய் குறைவாக வாங்கி அசத்தியிருக்கிறது.






