இன்று ஐபிஎல் மினி ஏலத்தின் முதல் சுற்றில் பல சுவாரசிய சம்பவங்கள் நடைபெற்று இருக்கிறது. மிகக்குறிப்பாக சிஎஸ்கே ஐபிஎல் விலையில் சாதனையை உடைக்க அனுமதிக்கவில்லை.
தற்போது அபுதாபியில் 19ஆவது ஐபிஎல் சீசனுக்கான ஐபிஎல் மினி ஏலம் நடைபெற்று வருகிறது. இந்த ஏலத்தில் மிக முக்கியமான இரண்டு வீரர்களாக கேமரூன் கிரீன் மற்றும் வெங்கடேஷ் ஐயர் இருவரும் இருக்கிறார்கள்.
மும்பை இந்தியன்ஸ் செய்த சம்பவம்
இந்த நிலையில் முதல் சுற்றில் கேமரூன் கிரீன் பெயர் அறிவிக்கப்பட்டது. இவர் இந்த ஏலத்தில் மிக அதிக தொகைக்கு ஏலம் போவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. எனவே அதிக தொகை வைத்திருக்கும் சிஎஸ்கே அல்லது கேகேஆர் அணிகள் இவரை வாங்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த ஏலத்திற்கு மிகக் குறைந்த பணத்தோடு 2.60 கோடி ரூபாயை வைத்துக் கொண்டு உள்ளே வந்த மும்பை இந்தியன்ஸ் கேமரூன் கிரீனை வாங்க களத்தில் குதித்தது. இது பலரையும் ஆச்சரியப்படுத்தி விட்டது. ஆனால் குறைந்த பணம் இருந்த காரணத்தினால் சீக்கிரத்தில் ஏலத்தை விட்டு விலகியும் கொண்டது.
சிஎஸ்கே செய்த சம்பவம்
இதைத்தொடர்ந்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் இரண்டும் கேமரூன் கிரீனுக்காக ஏலத்தில் மோதிக்கொண்டன. 10 கோடியை தாண்டியவுடன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி ஏலத்தில் இருந்து விலகிக் கொண்டது. இதைத்தொடர்ந்து சிஎஸ்கே களத்தில் குதித்தது.
இந்த நிலையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 25.20 கோடி ரூபாய்க்கு ஏலத்தைக் கேட்டு நிறுத்தியது. ஆனால் சிஎஸ்கே இதற்கு மேல் ஏலத்தை கேட்கவில்லை. இதனால் இதே விலையில் கேமரூன் கிரீனை கேகேஆர் வாங்கிக் கொண்டது.
இதையும் படிங்க : 408-7.. இந்தியாவின் அடுத்த தோனி இரட்டை சதம் அடித்து அசத்தல்.. U19 ஆசியக் கோப்பையில் அபாரம்
மேலும் ரிசப் பண்ட் 27 கோடி ரூபாய்க்கும், ஸ்ரேயாஸ் ஐயர் 26.75 கோடி ரூபாய்க்கும் ஐபிஎல் ஏலத்தில் அதிக விலைக்கு சென்றவர்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் சிஎஸ்கே இவர்களைத் தாண்டி கேமரூன் கிரீன் விலை செல்வதற்கு விடவில்லை. 25 கோடி ரூபாய் தொட்டதும் அவர்கள் நின்று கொண்டார்கள். எனவே ஐபிஎல் தொடரில் கேமரூன் கிரீன் அதிகபட்ச விலைக்கு ஏலம் போவார் என்ற எதிர்பார்ப்பு சிஎஸ்கேவால் உடைக்கப்பட்டது.






