ஆர்சிபி மிடில் ஆர்டர் ஆர்சிபி-க்கே பயம் காட்டியும் பரபரப்பான போட்டியில் ராஜஸ்தானை வென்றது ஆர்சிபி!

0
336
RCB

இன்று ஐபிஎல் தொடரில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் பெங்களூரில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் மோதிக்கொண்ட போட்டியில் பெங்களூரு அணி பரபரப்பான கடைசி ஓவரில் வெற்றி பெற்று இருக்கிறது!

டாசை இழந்து முதலில் பேட்டிங் செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராட் கோலி முதல் பந்திலேயே ஆட்டம் இழந்து அதிர்ச்சி அளித்தார். இதற்கு அடுத்து ஷாபாஷ் அகமத் இரண்டு ரன்களில் வெளியேறினார்.

- Advertisement -

இதை அடுத்து ஜோடி சேர்ந்த பாப் மற்றும் மேக்ஸ்வெல் இருவரும் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அரை சதம் அடித்து 127 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள். பாப் 39 பந்துகளில் 8 பவுண்டரி மற்றும் 2 சிக்ஸர்கள் உடன் 62 ரன்களும், மேக்ஸ்வெல் 44 பந்துகளில் ஆறு பவுண்டரி மற்றும் நான்கு சிக்ஸர்கள் உடன் 77 ரண்களும் எடுத்து ஆட்டம் இழந்தார்கள்.

குறைந்தபட்சம் 210 ரன்களை பெங்களூர் அணி எடுக்கும் என்று இருந்த நிலையில் இதற்கு அடுத்து வந்த லோம்ரர் 8, தினேஷ் கார்த்திக் 16, பிரபு தேசாய் 0, ஹசரங்கா 6, விஜயகுமார் வைசாக் 0 என அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற, டேவிட் வில்லி 4, முகமது சிராஜ் 1 ரன் என எடுத்து ஆட்டம் இழக்காமல் களத்தில் இருக்க, 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி ஒன்பது விக்கெட்டுகள் இழப்புக்கு 189 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதையடுத்து இலக்கை நோக்கி விளையாடிய ராஜஸ்தான் அணிக்கு அதிரடி வீரர் பட்லர் ரன் இல்லாமல் சிராஜ் ஓவரில் கிளீன் போல்ட் ஆகி வெளியேறினார். இதற்கு அடுத்து இணைந்த ஜெய்ஸ்வால் மற்றும் படிக்கல் இருவரும் மிகச் சிறப்பாக விளையாடி 98 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து நல்ல அடித்தளம் கொடுத்தார்கள். படிக்கல் 34 பந்துகளில் ஏழு பவுண்டரி மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 52 ரன்கள் எடுத்தும், ஜெய்ஸ்வால் 37 பந்துகளில் 5 பவுண்டரி மற்றும் 2 சிக்சர் உடன் 47 ரன்கள் எடுத்தும் ஆட்டம் இழந்தார்கள். போல்ட் மற்றும் சந்தீப் சர்மா தலா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள்.

- Advertisement -

பேட்டிங் செய்ய சாதகமான ஆடுகளத்தில் வெற்றி ஏறக்குறைய கையில் இருந்த நிலையில் ராஜஸ்தான் அணிக்கு இவர்களுக்கு அடுத்து வந்த பேட்ஸ்மேன்கள் கேப்டன் சஞ்சு சாம்சன் 22, ஹெட்மையர் 3, ரவிச்சந்திரன் அஸ்வின் 12 ரன் என மட்டுமே எடுக்க வெற்றி கடினமானது.

கடைசி ஓவரில் 20 ரன்கள் தேவை என்ற நிலையில் அஸ்வின் ஒரு முனையில் போராடி ஆட்டம் இழந்தார். இன்னொரு பக்கம் இளம் வீரர் துருவ் ஜுரல் ஆட்டம் இழக்காமல் பதினாறு பந்துகளில் இரண்டு பவுண்டரி மற்றும் இரண்டு சிக்ஸர்கள் உடன் 34 ரன்கள் எடுத்து சிறப்பான பேட்டிங்கை வெளிப்படுத்தினார். இவர்களது போராட்டம் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி வெற்றிக்கு உதவவில்லை. இறுதியில் 7 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. ஹர்சல் படேல் நான்கு ஓவர்கள் பந்துவீசி முப்பத்தி இரண்டு ரன்கள் தந்து நான்கு விக்கெட்டுகள் வீழ்த்தி அசத்தினார்.