ஐபிஎல் 2024

19.1 ஓவரில் சுருண்ட டெல்லி.. ஆர்சிபி அபார வெற்றி.. சிஎஸ்கேவுக்கு ப்ளே ஆஃப்-ல் பிரச்சனை

இன்று ஐபிஎல் தொடரின் 62 ஆவது போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்றது. இந்த போட்டியில் அபாரமாக விளையாடிய ஆர்சிபி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணி முதலில் பந்து வீசுவது என முடிவு செய்தது. பெங்களூரு அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே பிளே ஆப் வாய்ப்பில் இருக்க முடியும் என்கின்ற நிலையில் களம் இறங்கியது. டெல்லி அணிக்கு பிளே ஆப் சுற்றிற்கான வாய்ப்பு மிக அதிகமாகவே இருந்தது.

இந்த நிலையில் பெங்களூர் அணிக்கு கேப்டன் பாப் டு பிளேசிஸ் 7 பந்தில் 6 ரன்கள், விராட் கோலி 13 பந்தில் 27 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்கள். இதற்கு அடுத்து வந்த ரஜத் பட்டிதார் 32 பந்தில் 52 ரன்கள், வில் ஜேக்ஸ் 29 பந்தில் 41 ரன்கள் எடுத்தார்கள். இந்த இருவரும் சேர்ந்து 53 பந்தில் 88 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தார்கள்.

மேலும் கடைசிவரை களத்தில் நின்ற கேமரா கிரீன் போராடி ஆட்டம் இழக்காமல் 24 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 20 ஓவர்கள் முடிவில் பெங்களூரு அணி 9 விக்கெட் இழப்புக்கு 187 ரன்கள் எடுத்தது. டெல்லி அணியின் தரப்பில் கலில் அகமது மற்றும் ராசிக் சலாம் இருவரும் தலா இரண்டு விக்கெட் கைப்பற்றினார்கள்.

- Advertisement -

இதைத் தொடர்ந்து இலக்கை நோக்கி விளையாடிய டெல்லி அணிக்கு ரிஷப் பண்ட் விளையாடாததால் வந்த டேவிட் வார்னர் 2 பந்தில் 1 ரன், ஜாக் பிரேசர் 8 பந்தில் 21 ரன்கள், அபிஷேக் போரல் 3 பந்தில் 2 ரன், ஷாய் ஹோப் 23 பந்தில் 29 ரன், குமார் குஷ்கரா 3 பந்தில் 2 ரன் என வரிசையாக அடுத்தடுத்து வெளியேறி டெல்லி அணிக்கு பின்னடைவை உண்டாக்கினார்கள்.

இதையும் படிங்க : என்றும் சிஎஸ்கேவின் சின்ன தல.. ரெய்னாவுக்கு தோனி செய்த செயல்.. சேப்பாக்கில் நெகிழ்ச்சி சம்பவம்

இந்த நிலையில் தனி ஒரு வீரராக அக்சர் படேல் மட்டும் போராடி 37 பந்தில் 57 ரன்கள் எடுத்தார். முடிவில் 19.1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 140 ரன்கள் டெல்லி ஆல் அவுட் ஆனது. 47 ரன்கள் வித்தியாசத்தில் பெங்களூரு அணி வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் யாஸ் தயால் மூன்று விக்கெட் கைப்பற்றினார். மேலும் கடைசி போட்டியில் சிஎஸ்கே அணியை நல்ல ரன் ரேட்டில் வென்றால் ஆர்சிபி பிளே ஆப் தகுதி பெறும் நிலையை எட்டி இருக்கிறது. சிஎஸ்கே அணி கட்டாயம் ஆர்சிபி அணியை வெல்ல வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறது

Published by