கேப்டன் பொறுப்பு விவகாரத்தால் ஜடேஜா மனக்காயம் அடைந்தார் – உண்மையை உடைத்த சென்னை சிஇஓ காசி விஸ்வநாதன்

0
1062
CSK CEO about Ravindra Jadeja

பதினைந்தாவது ஐ.பி.எல் சீசன் கடந்த மாதம் துவங்கி மிகச்சிறப்பாக நடந்து வருகிறது. இந்த ஐ.பி.எல் சீசனில் புதிய இரண்டு அணிகளின் வருகை, தொடருக்குப் புதிய வண்ணத்தை அளித்த வேளையில், கிரிக்கெட் இரசிகர்களும், இந்திய கிரிக்கெட் வாரியமும் விரும்பத்தகாத சில நிகழ்வுகளும் அரங்கேறிக்கொண்டே இருக்கிறது. இந்திய நட்சத்திர பேட்ஸ்மேன்களின் மோசமான பேட்டிங் பார்ம் மற்றும் சில இந்திய வீரர்களின் காயம் பின்னடைவை தந்திருக்கிறது.

இந்த ஆண்டு ஐ.பி.எல் சீசனின் முதல் போட்டியில் சென்னை அணியும், கொல்கத்தா அணியும் மோதிக் கொள்வதற்கு முதல் நாள் சென்னை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஐ.பி.எல் வெற்றிக்கரமான கேப்டன் மகேந்திர சிங் தோனி விலகினார். இதனையடுத்து ரவீந்திர ஜடேஜாவை புதிய கேப்டனாக சென்னை அணி நிர்வாகம் அறிவித்தது. தோனி கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியது, ஏற்கனவே திட்டமிடப்பட்ட ஒன்று என்று தோனி “இந்த வருடம் கேப்டன் பொறுப்பை ஏற்க வேண்டுமென்று, போன வருடமே ஜடேஜாவுக்கு தெரியும்” என்று பேசியதிலிருந்து தெரிந்தது.

- Advertisement -

இந்த நிலையில் எப்போதும் சென்னை அணிக்கு நடக்காத வகையில் முதல் நான்கு ஆட்டங்களில் தொடர்ந்து தோற்றது. அதற்கடுத்தும் தொடர்ச்சியான வெற்றி வரவேயில்லை. இதனால் சென்னை அணியின் ப்ளேஆப்ஸ் வாய்ப்பின் இறுதி நிலையில் இருந்தபோது, மகேந்திர சிங் தோனியிடம் ரவீந்திர ஜடேஜா மீண்டும் கேப்டன் பொறுப்பை ஒப்படைத்தார். இப்படித்தான் வெளியில் கூறப்பட்டது. மகேந்திர சிங் தோனியும் ஜடேஜாவால் கேப்டன் பொறுப்பின் அழுத்தத்தை தாங்க முடியவில்லை. இதனால் அவரின் தனிப்பட்ட ஆட்டத்திறனும் பாதிக்கப்பட்டது. எனவே கேப்டன் பொறுப்பிலிருந்து விலகிக்கொண்டார் என்று கூறப்பட்டது.

இதுவொரு புறம் நடக்க, இரவீந்திர ஜடேஜாவின் இன்ஸ்டாம்கிராம் பக்கத்தை அன்பாலோ செய்ந்திருந்தது, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ சமூக வலைத்தள பக்கம். கேப்டன் பொறுப்பு விவகாரத்தில் சென்னை அணி நடந்துகொண்ட விதம் ஜடேஜாவை காயப்படுத்தியதாகவும், அதனாலே அவர் அணியிலிருந்து வெளியேறிவிட்டதாகவும் வெளியிலிருந்து தகவல்கள் பரவுகின்றன.

இது மட்டும் இல்லாமல் முன்னாள் இந்திய வீரரான சஞ்சய் மஞ்ரேக்கரும் “ஜடேஜா தொடரின் முழுமைக்கும் இல்லாதது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. பெங்களூர் அணியுடனான ஆட்டத்தில் அவருக்குக் கையில் ஏற்பட்ட காயம் பெரியதாகவும் தெரியவில்லை. இதெல்லாம் வெளிலிருந்து பார்ப்பவர்களுக்கு, இதில் ஏதோ இருப்பதாய் தோன்றும்” என்று பூடமாகக் கூறியிருந்தார். சென்னை அணியின் சி.இ.ஓ காசி விஸ்வநாதன் இதுபற்றி விளக்கம் கூறியிருந்தாலும், ஆனால் நடந்தவைக்கு அந்த விளக்கம் பொருந்தவில்லை என்பதுதான் உண்மை!

- Advertisement -