இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி நான்கு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி இருக்கிறது.
இந்த சூழ்நிலையில் இந்திய வீரர் குறித்து ரவீந்திர ஜடேஜா சில முக்கியமான கருத்துக்களை தெரிவித்து இருக்கிறார்.
ரவீந்திர ஜடேஜா கருத்து
சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் வருகிற 19ஆம் தேதி முதல் நடைபெற உள்ள நிலையில், இதற்காக இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான ஒரு நாள் தொடர் மூலமாக பயிற்சி பெற்று வருகிறது. இதில் முதல் இரண்டு போட்டிகளில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றி விட்டது. இரண்டாவது போட்டியின் மூலமாக ரோஹித் சர்மா அபார சதம் அடித்து திரும்ப தனது பழைய பேட்டிங் ஃபார்மை மீட்டெடுத்து இருக்கிறார்.
இதில் குறிப்பிடத்தக்க விஷயமாக சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்திய அணியின் நம்பிக்கை நட்சத்திரமான ஜஸ்பிரித் பும்ரா இடம் பெற்றிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் சமீபத்தில் அவர் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான ஐந்தாவது டெஸ்ட் போட்டியின் போது காயமடைந்தார். அவர் சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இடம் பெற்றிருந்தாலும் உறுதியாக விளையாடுவாரா? என்பது குறித்து தெரியாது. இந்த சூழ்நிலையில் பும்ராவின் உடல்நிலை குறித்த தகவல் குறித்து ஜடேஜாவிடம் கேட்கப்பட்டது. இதற்கு ஜடேஜா சில சுவாரஸ்யமான பதில்களை அளித்திருக்கிறார்.
அது என் வேலை அல்ல
இது குறித்து அவர் விரிவாக கூறும்போது ” பும்ராவின் உடல்நிலை குறித்து கேட்கிறீர்கள். அது என்னுடைய துறை அல்ல, அவரை மருத்துவ குழுவினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர் விரைவாக உடல் தகுதி பெறுவார் என்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. மேலும் இது மிகப்பெரிய ஊக்கமாக எங்களுக்கு இருக்கும். இது இந்திய அணிக்கு மட்டுமல்லாமல் முழு இந்திய நாட்டிற்குமே மிகப்பெரிய நல்ல விஷயமாகும்” என்று ஜடேஜா பேசியிருக்கிறார்.
இதையும் படிங்க:உங்களை யாருமே மதிக்க மாட்டாங்க.. இந்த மாதிரி செய்றது ரொம்ப தப்பு.. முகமது அமீரின் செயலுக்கு ஆப்கன் வீரர் கண்டனம்
இந்திய அணியின் சுழல் பந்துவீச்சுத் துறை வலுவாக இருந்தாலும் வேகப்பந்து வீச்சு சற்று பலவீனமாக இருப்பது போல தெரிகிறது. பல மாதங்கள் கழித்து முகமது சமி இந்திய அணிக்கு திரும்பி இருந்தாலும் அவர் விளையாடிய இரண்டு ஒருநாள் போட்டிகளில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. பும்ராவுக்கு பதிலாக களமிறங்கிய ஹர்ஷித் ராணா ஓரளவு நன்றாக செயல்பட்டு வருகிறார் இருப்பினும் பும்ராவின் வருகை இந்திய அணிக்கு பெரிய நல்ல விஷயமாக பார்க்கப்படும்.






