டெல்லி அணிக்கு எதிராக ஜடேஜா விளையாடாமல் இருப்பதற்கு இதுதான் காரணம்

0
3146
Ravindra Jadeja and MS Dhoni

டெல்லி கேப்பிடல் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தற்போது தொடங்கியுள்ளது. போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பண்ட் முதலில் பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
இன்றைய போட்டியில் இந்த இரு அணிகளிலும் முக்கிய வீரர்கள் இடம் பெறவில்லை. ஒரு சில மாற்றங்களும் இன்றைய போட்டியில் நிகழ்ந்துள்ளது.

சென்னை அணியில் களமிறங்காத ரவீந்திர ஜடேஜா

டெல்லி அணியை போலவே சென்னை அணியில் முக்கிய ஆல்ரவுண்டர் வீரரான ரவீந்திர ஜடேஜா களமிறங்கவில்லை. ரவிந்திர ஜடேஜாவின் பிட்னஸ் தற்பொழுது சரியாக இல்லாத காரணத்தினால் அவருக்கு பதிலாக ஷிவம் டுபே இன்றைய போட்டியில் களம் இறங்கியுள்ளார்.

- Advertisement -
காய்ச்சல் காரணமாக களமிறங்காத பிரித்திவி ஷா

டெல்லி அணியின் ஓபனிங் வீரர் பிரித்திவி ஷா இன்றைய போட்டியில் களம் இறங்கவில்லை. மருத்துவமனையில் அவர் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார். காய்ச்சல் காரணமாக தான் மருத்துவமனையில் உள்ளதை அவரே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஸ்டோரி ஒன்றை பிரித்திவி ஷா பதிவிட்டுள்ளார்.”தான் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு அதில், காய்ச்சல் காரணமாக நான் அனுமதிக்கப்பட்டு இருக்கிறேன். தற்போது நான் நலமாக இருக்கிறேன் கூடிய விரைவில் அணிக்கு திரும்புவேன்” என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

அதேபோல டெல்லி அணியில் மந்தீப் சிங்குக்கு பதிலாக கே எஸ் பரத் மற்றும் லலித் யாதவுக்கு பதிலாக அக்சர் பட்டேல் களமிறங்கியுள்ளனர்

- Advertisement -
ப்ளே ஆப் சுற்றுக்கு டெல்லி அணி கடும் போட்டி

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஏறக்குறைய லீக் தொடரிலிருந்து வெளியேறி விட்டது. மறுபக்கம் டெல்லி அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற இன்னும் மூன்று போட்டிகளில் வெற்றி தேவை. அந்த அணிக்கு இன்றைய போட்டியையும் சேர்த்து நான்கு போட்டிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.

எனவே இனிவரும் அடுத்தடுத்த போட்டிகளில் டெல்லி அணி வெற்றி பெற வேண்டும் என்கிற கட்டாயத்தில் உள்ளது. எனவே இன்றைய போட்டியில் டெல்லி அணியின் ஆட்டம் காரசாரமாக இருக்கும் என்று நாம் எதிர்பார்க்கலாம்