ஐசிசி டி20 ஆல்ரவுண்டர் ரேங்கிங்.. கோலிக்கு கீழே இருக்கும் ஜடேஜா.. வினோதமான சம்பவம்

0
361
Jadeja

நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி சாம்பியன் பட்டம் வென்றதும் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மா நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோலி மற்றும் ஆல் ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா மூவரும் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார்கள். இந்த நிலையில் ஐசிசி டி20 கிரிக்கெட் ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் விராட் கோலி ரவீந்திர ஜடேஜாவை விட மேலே இருக்கும் வினோதமான நிகழ்வு நடந்திருக்கிறது.

தற்பொழுது அறிவிக்கப்பட்டு இருக்கும் ஐசிசி டி20 ஆல் கவுண்டர்களுக்கான பட்டியலில் முதல் இடத்தில் இலங்கையின் வனிந்து ஹஸரங்கா இருக்கிறார். இரண்டாவது இடத்தில் ஆப்கானிஸ்தான் அணியின் முகமது நபி மற்றும் மூன்றாவது இடத்தில் இந்திய அணியின் ஹர்திக் பாண்டியா ஆகியோர் தொடர்கிறார்கள். முதல் 10 இடங்களில் ஹர்திக் பாண்டியா மட்டுமே இந்திய வீரராக இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

அடுத்தடுத்த இடங்களில் ஆஸ்திரேலியாவின் மார்க்கஸ் ஸ்டாய்னிஷ், ஜிம்பாப்வே சிக்கந்தர் ராஸா, பங்களாதேஷ் சாகிப் அல் ஹசன், நேபாளத்தின் திபேந்திர சிங் ஆரி, தென் ஆப்பிரிக்காவின் எய்டன் மார்க்ரம், மேலும் இங்கிலாந்தின் மொயின் அலி மற்றும் லியாம் லிவிங்ஸ்டன் ஆகியோர் முதல் பத்து இடங்களில் இருக்கிறார்கள்.

நடைபெற்று முடிந்த டி20 உலக கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய இரு நாடுகளில் நடைபெற்ற காரணத்தினால், அந்த சூழ்நிலைக்காக அதிக சுழல் பந்துவீச்சாளர்கள் வேண்டும் என்பதற்காகவும், மேலும் பேட்டிங் வரிசை நீளமாக இருக்க வேண்டும் எனவும் அக்சர் படேல் இருக்கும் சூழ்நிலையிலும் ரவீந்திர ஜடேஜாவையும் தேர்ந்தெடுத்தார்கள்.

அதே சமயத்தில் டி20 கிரிக்கெட்டில் ஆல் ரவுண்டராக சடேஜாவின் செயல்பாடு பேட்டிங் மற்றும் பந்துவீச்சில் சர்வதேச அளவில் சிறப்பாக இருந்தது இல்லை. இது நடந்து முடிந்த டி20 உலகக்கோப்பை தொடரிலும் தொடர்ந்தது. பேட்டிங் செய்ய கிடைத்த வாய்ப்பில் இங்கிலாந்து அணிக்கு எதிராக அரைஇறுதியில் மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் விளையாடினார்.

- Advertisement -

மேலும் பந்துவீச்சில் அவரது செயல்பாடு மிகவும் சுமாராக இருந்தது. அவரது இடத்தை அக்சர் படேல் பேட்டிங் மற்றும் பந்துவீச்சு என இரண்டிலும் நிரப்பி இருந்தா. இதன் காரணமாக சர்வதேச டி20 கிரிக்கெட் ஆல் ரவுண்டர் தரவரிசை பட்டியலில் ரவீந்திர ஜடேஜா விராட் கோலிக்கும் கீழே இருக்கும் நகைச்சுவையான சம்பவம் நடைபெற்றிருக்கிறது.

இதையும் படிங்க : இந்தியாவின் அந்த உ.கோ-பை தோல்விக்கு மட்டும்தான் விடிய விடிய அழுதேன்.. ஆனா 2011 மகிழ்ச்சி இல்ல – கம்பீர் பேட்டி

தற்போது ஐசிசி ஆல்ரவுண்டர் தரவரிசை பட்டியலில் விராட் கோலி 85 வது இடத்தில் இருக்கிறார். அதே சமயத்தில் ரவீந்திர ஜடேஜா 10 இடங்கள் பின்தங்கி 95வது இடத்தில் இருக்கிறார். மேலும் இவர்கள் இருவரும் எதிர்காலத்தில் இந்த பட்டியலில் இருந்து வெளியே வருவார்கள். ஆனால் ஓய்வு பெற்றுவிட்ட காரணத்தினால் ரவீந்திர ஜடேஜா இனி விராட் கோலியை இந்த பட்டியலில் முந்த முடியாது என்பது வினோதமான நகைச்சுவை!