இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர் ஜடேஜா அபாரமாக விளையாடி தனது அரை சதத்தை பூர்த்தி செய்து இருக்கிறார். நேற்று டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்வது ராகுல் இரண்டு ரன்களிலும் கருண் நாயர் 30 ரன்களிலும் ஆட்டம் இழக்க ஜெய்ஸ்வால் 87 ரன்களில் சதத்தை தவறவிட்டார்.
இந்த சூழலில் ரிஷப் பண்ட் 25 ரன்களிலும், நிதிஷ்குமார் ரெட்டி ஒரு ரன்னிலும் ஆட்டம் இழந்தனர். இதனால் இந்திய அணி 211 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோருடன் தடுமாறியது. அப்போது களத்திற்கு வந்த ஜடேஜா கேப்டன் சுப்மன் கில் ஜோடி சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். சகில் தங்களுடைய சதத்தை பூர்த்தி செய்ய ஜடேஜா நிதானம் காட்டினார்.
ஜடேஜா அரைசதம்:
இந்த சூழ்நிலையில் 310 ரன்களுக்கு ஐந்து விக்கெட் என்ற ஸ்கோருடன் இரண்டாவது நாள் ஆட்டத்தை இந்திய அணி தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடிய ஜடேஜா தன்னுடைய அரை சதத்தை பூர்த்தி செய்து இருக்கின்றார். இதன் மூலம் பல்வேறு சாதனைகளை ஜடேஜா படைத்திருக்கின்றார். சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இது ஜடேஜாக்கு 23 வது அரை சதமாகும்.
இங்கிலாந்துக்கு எதிராக ஏழாவது அரை சதமாகும். வெளிநாட்டு மண்ணில் ஜடேஜா அடிக்கப்பட்ட 11வது அரைசதம் இதுவாகும். அது மட்டுமில்லாமல் பிர்மிங்காம் மைதானத்தில் அதிக முறை அரைசதம் அடித்த வீரர் பட்டியலில் ஜடேஜாவும் இணைந்து இருக்கின்றார்.
ஜடேஜா சாதனை:
கவாஸ்கர் அதிகபட்சமாக மூன்று முறை அரை சதம் அடித்த நிலையில் விராட் கோலி, தோனி, பண்ட், குண்டப்ப விஸ்வநாத் ஆகியோர் 2 முறை அடித்து பட்டியலில் தற்போது ஜடேஜாவும் இணைந்து இருக்கின்றார்.
இதையும் படிங்க: கம்பீர் எடுக்கும் முடிவில் எனக்கு உடன்பாடே கிடையாது.. தொடர் வேணுமா லார்ட்ஸ் மேட்ச் வேணுமா? – சங்கக்கரா விமர்சனம்
அது மட்டும் அல்லாமல் இங்கிலாந்துக்கு எதிராக நம்பர் ஏழாவது அல்லது அதற்கு கீழ் உள்ள வரிசையில் களமிறங்கி அதிக அரை சதம் அடித்தவர்கள் பட்டியலில் அஸ்வினை பின்னுக்கு தள்ளி ஜடேஜா இரண்டாவது இடத்தை பிடித்திருக்கின்றார். இதுபோன்று இங்கிலாந்து மண்ணில் 700 ரன்களுக்கு மேலையும், பந்துவீச்சில் 25 விக்கெட் மேலேயும் எடுத்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையை ஜடேஜா படைத்திருக்கின்றார். கபில்தேவ், அணில் கும்பலை போன்ற ஜாம்பவான்கள் கூட இந்த சாதனையை செய்தது கிடையாது.






