கம்பீர் எடுக்கும் முடிவில் எனக்கு உடன்பாடே கிடையாது.. தொடர் வேணுமா லார்ட்ஸ் மேட்ச் வேணுமா? – சங்கக்கரா விமர்சனம்

0
156
Gambhir

இங்கிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் பும்ரா விளையாட வைக்கப்படாதது குறித்து இலங்கை அணியின் முன்னாள் கேப்டன் குமார் சங்கக்கரா விமர்சனம் தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி இங்கிலாந்து அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து இருந்தது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெல்ல வேண்டிய கட்டாயம் சூழ்நிலையில் இருக்கும் பொழுது, அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் பும்ராவை விளையாட வைக்காதது பல முன்னாள் வீரர்களுக்கு குழப்பத்தை உருவாக்கி இருக்கிறது.

- Advertisement -

இந்த முடிவை யார்தான் எடுக்கிறார்கள்?

இதுகுறித்து பேசி இருக்கும் குமார் சங்கக்கரா கூறும்பொழுது ” முடிவு எப்படி எடுக்கப்படுகிறது? இப்படியான முடிவை யார் எடுக்கிறார்கள்? என்று தெரிந்து கொள்ள எனக்கு ஆர்வமாக இருக்கிறது. பிசியோவிடம் பேசி முடிவெடுக்கிறார்களா? இல்லை சம்பந்தப்பட்ட வீரரிடம் பேசி முடிவெடுக்கிறார்களா? இவர்களுக்கு இந்த தொடர் வேண்டுமா? இல்லை அடுத்து லார்ட்ஸ் போட்டிதான் தேவையா? என்று எதுவுமே புரியவில்லை”

“நீங்கள் தற்போது இந்திய அணியின் ஸ்கோரை பார்த்தால் இது ஒரு சமநிலையான நாளாக இருக்கிறது. இங்கிலாந்து அணி ஐந்து விக்கெட் கைப்பற்றியதால் கொஞ்சம் அவர்கள் பக்கம் ஆட்டம் சென்றது போல்தான் இருக்கிறது. இந்த நிலையில் பும்ராவை விளையாடாதது பிரச்சினையாக மாறும்”

- Advertisement -

கம்பீர் இதை செய்திருக்க வேண்டும்

“எனவே பயிற்சியாளர் கம்பீர் பும்ராவிடம் சென்று ‘ நாங்கள் உங்களை 1, 3, 5வது டெஸ்டில் விளையாட வைக்கலாம் என்று இருந்தோம். ஆனால் நாம் முதல் டெஸ்ட் போட்டியில் தோல்வி அடைந்து விட்டதால், உங்களை இரண்டாவது டெஸ்ட் போட்டியில் விளையாட வைக்க வேண்டிய சூழ்நிலை இருக்கிறது. உங்களால் முடியும் என்றால் நீங்கள் மூன்றாவது டெஸ்ட் போட்டியையும் விளையாடலாம்” என்று பேசி விளையாட வைத்திருக்க வேண்டும்.

இதையும் படிங்க : கில் இந்த முறை பேட்டிங்ல முக்கிய 2 மாற்றத்தை செஞ்சிருக்காரு.. அவர் சிறப்பா இருக்க காரணம் இதுதான் – ரவி சாஸ்திரி கருத்து

“இந்திய அணியில் மூன்று மாற்றங்கள் செய்யப்பட்டு இருப்பது கடந்த போட்டிக்கான வினை மட்டுமே கிடையாது. அவர்கள் கடைசியாக ஏழு டெஸ்ட் போட்டிகள் தோற்று இருக்கிறார்கள். எனவே வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய அழுத்தத்தில் இருக்கிறார்கள். இதுதான் இவர்களுடைய எல்லா மாற்றங்களிலும் எதிரொலிக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -