கிரிக்கெட் செய்திகள் | Daily Cricket News in Tamil

ஜடேஜா வெறும் 3 விக்கெட் தான் எடுத்து இருக்காரு.. இந்திய அணிக்கு பெரிய தலைவலி காத்திருக்கு.. முன்னாள் சிஎஸ்கே வீரர் கருத்து

இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்திய வீரர் ஜடேஜா தொடர்ந்து 4 முறை அரைசதம் அடித்துள்ளார். இந்த சூழலில், இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயீன் அலி, மூத்த ஆல்-ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் உறுதியான பேட்டிங்கைப் பாராட்டினார்.

- Advertisement -

ஆனால் அவரது பந்து வீச்சு சரியாக இல்லை என்று கூறினார். லார்ட்ஸில் 5வது நாளில் ஜடேஜா 181 பந்துகளில் 61 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் நின்று, நான்கு மணி நேரத்திற்கும் மேலாக களத்தில் இருந்து இந்தியாவின் நம்பிக்கைகளை உயிர்ப்புடன் வைத்திருந்தார்.

ஜடேஜா வெறும் 3 விக்கெட்:

36 வயதான ஜடேஜா ஆண்டர்சன்-டெண்டுல்கர் ட்ரோஃபியின் மூன்று போட்டிகளில்  இதுவரை மூன்று விக்கெட்டுகளை மட்டுமே வீழ்த்தியுள்ளார். இது குறித்து பேசிய ஜடேஜா, “அவர் என்ன செய்கிறார் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும். பல ஆண்டுகளாக இதைச் செய்து வருகிறார். இந்தத் தொடரில் அவரது பேட்டிங் அற்புதமாக இருந்தது.”

“ஆனால் பந்து வீச்சில், அவர் விக்கெட்டுகளை எடுக்கவில்லை. ஆனால் அவர் தனது பாணியில் வீசுகிறார். மிகவும் கட்டுப்பாடாக வீசுகிறார். ஆனால் அவர் மிகச் சிறந்தவர் என்று சொல்ல முடியாது. இப்போது அவரது பேட்டிங் உச்சத்தில் உள்ளது. பந்து வீச்சைப் பொறுத்தவரை, அவர் விக்கெட்டுகளை எடுக்கவில்லை.”

- Advertisement -


குல்தீப்பை சேர்க்கனும்:

” ஆனால் நன்றாக வீசியுள்ளார், விக்கெட்டுகள் மட்டும் கிடைக்கவில்லை.குல்தீப்பை அணியில் பார்க்க விரும்புகிறேன். ஆனால் யாருக்கு பதிலாக என்பது தெரியவில்லை. வாஷிங்டன் நன்றாக பந்து வீசினார். ஜடேஜா நன்றாக பேட்டிங் செய்தார். எனவே குல்தீப்பை அணியில் சேர்ப்பது கடினம்.”

இதையும் பாருங்க: சிராஜ் 3 சிக்சர் அடிப்பார் என கூறிய தந்தை.. காமெடி பண்ணாதீங்க என சாடிய அஸ்வின்.. என்ன நடந்தது?

“நான் குல்தீப்பை பார்க்க விரும்புகிறேன், ஆனால் அவருக்கு இடம் கிடைக்கும் என்று நினைக்கவில்லை,” என்று மொயீன் கூறினார்.வரும் புதன்கிழமை இந்திய அணி மான்செஸ்டரில் உள்ள ஓல்ட் ட்ராஃபோர்டில் நான்காவது டெஸ்டில் விளையாடுகிறது. தொடரில் 2-1 என்ற கணக்கில் பின்தங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேளை நான்காவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றுவிட்டால் தொடரை அந்த அணி கைப்பற்றி விடும்.இதனால் பும்ரா, குல்தீப், சாய் சுதர்சன் உள்ளிட்ட வீரர்கள் நான்காவது டெஸ்ட் போட்டியில் இடம் பெறுவார்களா என்ற கேள்வி எழுந்துள்ளது.

- Advertisement -
Published by