இன்று தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய வீரர் சேவாக்கின் தனித்துவமான சாதனையை முறியடித்திருக்கிறார்.
தற்போது இந்தியா தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையே முதல் டெஸ்ட் போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்று போட்டியின் முதல் நாளில் தென் ஆப்பிரிக்கா 159 ரன்கள் எடுத்து ஆல் அவுட் ஆனது. இந்திய அணி 37 ரன்னுக்கு ஒரு விக்கெட் இழந்திருந்தது.
இந்திய அணிக்கு பிரச்சனை
இன்று தொடர்ந்து இரண்டாவது நாளில் விளையாடிய இந்திய அணிக்கு வாஷிங்டன் சுந்தர் 29 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதைத்தொடர்ந்து உள்ளே வந்த கேப்டன் சுப்மன் கில் ஒரு பவுண்டரி அடித்த உடனே கழுத்து சுளுக்கு காரணமாக உடனடியாக களத்தில் இருந்து வெளியேறி இருக்கிறார்.
இதற்கு அடுத்து சிறப்பாக விளையாடி வந்த கேஎல்.ராகுல் 39 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். திடீரென இந்திய அணி இரண்டு விக்கெட்டுகளை இழந்தவுடன், கேப்டன் சுப்மன் வில் காயம் காரணமாக வெளியேறி இருப்பது இந்திய அணிக்கு பிரச்சனையை உருவாக்கி இருக்கிறது. இந்திய அணி தற்பொழுது 3 விக்கெட் இழப்புக்கு 109 ரன்கள் எடுத்திருக்கிறது.
ரிஷப் பண்ட் சாதனை
இதைத்தொடர்ந்து உள்ளே வந்த ரிஷப் பெண் கேசவ் மகாராஜ் பந்துவீச்சில் உடனடியாக இறங்கி வந்து நேராக சிக்ஸர் அடித்தார். இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர் அடித்த இந்திய வீரர் என்கின்ற சாதனையை படைத்தார்.
இதற்கு முன்பாக வீரேந்தர் சேவாக் 178 இன்னிங்ஸ்களில் 90 சிக்ஸர்கள் அடித்திருந்தார். அதே சமயத்தில் ரிஷப் பண்ட் வெறும் 87 இன்னிங்ஸ்களில் சேவாக்கை விட 95 இன்னிங்ஸ் குறைவாக இந்த சாதனையைப் படைத்து அசத்தியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஜடேஜா ராஜஸ்தானுக்கு சாம்சன் சிஎஸ்கேவுக்கு.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. விலையில் திடீர் மாற்றம் – என்ன நடந்தது?
டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணிக்காக அதிக சிக்ஸர்கள் :
ரிஷப் பண்ட் – இன்னிங்ஸ் – 83 – 91
வீரேந்திர சேவாக் – இன்னிங்ஸ் – 178 – 90
ரோஹித் ஷர்மா – இன்னிங்ஸ் – 116 – 88
ரவீந்திர ஜடேஜா – இன்னிங்ஸ் – 129 – 80
எம். எஸ். தோனி – இன்னிங்ஸ் -144 – 78






