கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் குஜராத் டைட்டன்ஸ் அணியில் இருந்து வெளியேற வாஷிங்டன் சுந்தர் நினைத்தால் என அபினவ் முகுந்த் கூறியிருக்கிறார்.
தற்போது அந்த அணியில் இருந்து யாரும் எதிர்பார்க்காத வகையில் ரூதர்போர்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்கு டிரேடிங் செய்யப்பட்டார். இது ஐபிஎல் வட்டத்தில் பெரிய அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது.
மோசமான முடிவு
குஜராத் டைட்டன்ஸ் அணியில் பேட்டிங் வரிசையில் நான்காவது இடத்தில் ரூதர்போர்டு மிகவும் சிறப்பாக செயல்பட்டு வந்தார். மேலும் அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காகவும் டி20 கிரிக்கெட்டில் சமீபத்தில் மிகவும் அபாரமாக விளையாடி வருகிறார்.
இத்துடன் கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் வாஷிங்டன் சுந்தருக்கு குஜராத் டைட்டன்ஸ் அணி நிர்வாகம் பெரிய அளவில் வாய்ப்புகள் கொடுக்கவில்லை. ஆனால் கிடைத்த வாய்ப்புகளில் அவர் யாரும் எதிர்பார்க்காத வகையில் அதிரடியாக விளையாடி ரன்கள் குவித்தார்.
இதுவே காரணமாக இருக்கும்
இதுகுறித்து அபினவ் முகுந்த் பேசும் பொழுது “எனக்கு இந்த விஷயத்தில் ஒரு சந்தேகம் இருக்கிறது. கடந்த ஆண்டு குஜராத் அணியில் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் வாஷிங்டன் சுந்தர் மகிழ்ச்சியாக இருந்திருக்க மாட்டார். எனவே அவர் அந்த அணியை விட்டு வெளியேற நினைத்திருப்பார். ரூதர்போர்டு இருந்தால் இவருக்கு வாய்ப்பு தர முடியாத நிலை இருந்தது”
இதையும் படிங்க : சிஎஸ்கேக்கு வீரர்களை வாங்கியது தோனி கிடையாது.. இந்த இளம் வீரர்தான் வாங்கினார் – ஆகாஷ் சோப்ரா தகவல்
“வாஷிங்டன் சுந்தர் திறமைக்கு அவர் குறைந்தபட்சம் ஆறு இடங்களுக்குள் களம் இறங்க வேண்டும். எனவே இதற்காக ரூதர்போர்டை விட்டுக் கொடுக்க குஜராத் முடிவு செய்து இருக்கலாம். எனவே அவரை டிரேடிங் செய்து இருப்பார்கள். இதை நான் உறுதியாக சொல்லவில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் என்று சொல்கிறேன்” எனக் கூறியிருக்கிறார்.






